ஐபிஎல் 2025 ஃபைனலில் மழை வருமா? ரத்தானால் கோப்பை யாருக்கு? வெதர் ரிப்போர்ட் – ரூல்ஸ் இதோ

RCB vs Pbks Rain
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி கண்ட பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அவ்விரு அணிகளும் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

எனவே இம்முறை சிறப்பாக விளையாடி முதல் கோப்பையை முத்தமிடப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் இப்போட்டியில் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதால் போட்டி முழுமையாக நடைபெறுமா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. சொல்லப்போனால் குவாலிபயர் 2 மற்றும் ஃபைனல் போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அங்கே மழை பெய்வதற்கு அதிகப்படியான சூழ்நிலைகள் இருப்பதாக இந்திய வானிலை மையத்தின் அறிக்கை தெரிவித்தது.

- Advertisement -

மழை வருமா:

அதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனைக்கு பின் அறிவிக்கப்பட்ட புதிய அட்டவணையில் அவ்விரு போட்டிகள் அகமதாபாத் நகரில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்தது. ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற குவாலிபால் 2 போட்டி மழையால் 2 மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது. இருப்பினும் இரவு 9.40 மணிக்கு துவங்கிய போட்டி மேற்கொண்டு மழையால் பாதிக்கப்படாமல் நடைபெற்று முடிந்தது.

அது போன்ற சூழ்நிலையில் ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத் நகரில் 10 – 20% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக மதியம் 3 – மாலை 6 மணி வரை 30% மழை பெய்யும் என்று வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் போட்டித் துவங்கும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை 5% மட்டுமே மழை பொழிவுக்கான வாய்ப்பிருக்கிறது.

- Advertisement -

ரூல்ஸ் என்ன:

அதற்கு மேல் 20% மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. இதிலிருந்து இப்போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பது தெரிய வருகிறது. அது போன்ற சூழ்நிலையை சமாளிக்க பிசிசிஐ எக்ஸ்ட்ராவாக 120 நிமிடங்கள் ஒதுக்கியுள்ளது. எனவே இரவு 9.40 மணிக்கு மேல் தொடர்ந்து மழை பெய்தால் 11.40 வரை போட்டியை முழுமையாக நடத்த நடுவர்கள் காத்திருப்பார்கள்.

இதையும் படிங்க: ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார்? ரூல்ஸ் சொல்வது என்ன? – விவரம் இதோ

அதையும் தாண்டி மழை பெய்தால் நடுவர்கள் ஓவர்களை குறைத்து போட்டியை நடத்த முடிவெடுப்பார்கள். அதனுடைய உச்சமாக குறைந்தபட்சம் 5 ஓவர்கள் கொண்ட போட்டி மற்றும் சூப்பர் ஓவரை நடத்தி வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்கள். அதையும் தாண்டி மழை வந்தால் ஜூன் 4ஆம் தேதி ரிசர்வ் நாளில் போட்டி மீண்டும் துவங்கும். அப்போதும் அதே விதிமுறைகளைப் பின்பற்றி நடுவர்கள் போட்டியை நடத்தி முடிக்க முயற்சிப்பார்கள். அதையும் தாண்டி மழை பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐ விதிமுறைப்படி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் அணிக்கு கோப்பை கொடுக்கப்படும்.

Advertisement