- Advertisement -
ஐ.பி.எல்

இதெல்லாம் நான் கனவுல கூட நெனச்சி பாக்கல.. ஆனா எல்லாம் விதியால் எழுதப்பட்டது – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 2026 ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. பெங்களூரு அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு பேசிய : ரஜத் பட்டிதார்

இந்நிலையில் நேற்றைய இந்த போட்டிக்கு பின்னர் தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது : இந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்று இங்கு நிற்கும் தருணத்தை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் இதே மைதானத்தில் தான் இறுதிப்போட்டியில் வென்றிருந்தோம். எனவே இம்முறை இங்கு வரும்போது நிறைய நினைவுகள் எங்களிடம் இருந்தன.

- Advertisement -

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இறுதிப் போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த வெற்றி குறித்து பேசுவதற்கு வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற பின்னர் முதலில் பீல்டிங் செய்ய வேண்டும் என்ற தெளிவான திட்டம் எங்களிடம் இருந்தது. ஏனெனில் இந்த மைதானத்தில் சேசிங் செய்வது எளிதான ஒன்று. அதேபோன்று எங்களது பந்துவீச்சு திட்டத்தில் குஜராத் அணியின் டாப் 3 வீரர்களை பவர்பிளே ஓவர்களில் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம்.

அப்படி நினைத்தபடியே அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்ததால் இந்த போட்டிக்குள் எளிதாக நுழைய முடிந்தது. எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த தொடர் முழுவதுமே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்கள். அதன் காரணமாகவே எங்களால் அடுத்தடுத்த கோப்பைகளை கைப்பற்ற முடிந்தது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை கைப்பற்றுவேன் என்று நான் கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே மற்றும் மும்பைக்கு அடுத்து 3 ஆவது அணியாக வரலாற்று சாதனையுடன் கோப்பையை – தூக்கிய ஆர்.சி.பி

ஆனால் எல்லாம் விதியால் எழுதப்பட்டது. அப்படி இரண்டு கோப்பைகளுக்கு நான் கேப்டனாக இருந்ததை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் போது நிறைய அழுத்தம் இருந்தது. ஆனால் இம்முறை வெற்றி பெறும் போது மிகவும் நம்பிக்கையுடன் வெற்றி பெற்றோம் என ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -