இந்தியாவில் நடைபெற்று வந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியானது நேற்று நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த இறுதி போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
சாதனையுடன் 2 ஆவது கோப்பையை தூக்கிய ஆர்.சி.பி :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களையும், நிஷாந்த் சிந்து 20 ரன்களையும் குவித்தனர். ஆர்.சி.பி அணி சார்பாக ராஷிக் சலாம் தார் 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆர்.சி.பி அணியானது 18 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது ஆர்.சி.பி அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 75 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 32 ரன்களையும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் 2026 ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் ஆர்.சி.பி அணி வென்றுள்ளது.
அதிலும் குறிப்பாக சி.எஸ்.கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு அடுத்து இரண்டாவது அணியாக ஒரு வரலாற்று சாதனையுடன் இந்த கோப்பையை கைப்பற்றியுள்ளது. அப்படி ஆர்.சி.பி அணி நிகழ்ச்சி சாதனை யாதெனில் : கடந்த 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் சி.எஸ்.கே அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்த சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தது.
இதையும் படிங்க : டாசில் வெற்றி பெற்றால் என்ன செய்யனும்? மைதானம் யாருக்கு சாதகம் – விவரம் இதோ
அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் அடுத்தடுத்து சாம்பியன் படத்தை வென்றுள்ளது. அவர்கள் இருவருக்கு அடுத்து கடந்த ஆண்டு முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்.சி.பி அணி இம்முறையும் சாம்பியன் பட்டத்தை வென்று 2025-26 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



