இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது மே 31-ஆம் தேதியான இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்றால் என்ன செய்யனும்? :
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது முறையாக ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெறும் அணி என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த புள்ளி விவரங்களை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.
அந்த வகையில் இந்த அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை 24 டி20 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த அணிகள் 16 முறையும் அதேசமயம் சேஸிங் செய்த அணிகள் எட்டு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளன. இதன் காரணமாக டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு சாதகமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே குவாலிபயர் 1 போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய ஆர்.சி.பி அணி நேரடியாக இறுதிப் போட்டிகள் சென்றதால் இம்முறையும் அவர்களை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற காத்திருக்கிறது.
இதையும் படிங்க : தல தோனி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 3 ஆவது கேப்டனாக ரஜத் பட்டிதாருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ
அதே வேளையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் அணியும் இம்முறை சாம்பியன் பட்டம் வென்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



