தல தோனி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்து 3 ஆவது கேப்டனாக ரஜத் பட்டிதாருக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

Rajat Patidar Captain
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கிய இந்த நடப்பு 19-ஆவது ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்றிருந்த வேளையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன.

ரஜத் பட்டிதார் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

அதில் ஆர்.சி.பி மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள வேளையில் இன்று அகமதாபாத் நகரில் இந்த 2026 ஐ.பி.எல் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியில் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக விளையாடப்போகும் ரஜத் பட்டிதார் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக மகேந்திர சிங் தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகிய கருத்து மூன்றாவது கேப்டனாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது பலரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் பட்டிதார் நிகழ்த்த போகும் சாதனை யாதெனில் : கடந்த 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்.சி.பி அணி இம்முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் இந்த கோப்பையையும் அவர்கள் வெல்லும் பட்சத்தில் அடுத்தடுத்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை வென்ற மூன்றாவது கேப்டனாக ரஜத் பட்டிதார் சாதனை நிகழ்த்துவார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க ஒன்னும் சாதாரணமா பைனலுக்கு வரல.. எங்களோட இலக்கு இதுதான் – ரஜத் பட்டிதார் பேட்டி

ஏற்கனவே கடந்த 2010 மற்றும் 11-ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி சென்னை அணிக்காக அடுத்தடுத்த கோப்பைகளை கைப்பற்றியிருந்தார். அதேபோன்று ரோகித் சர்மா 2019 மற்றும் 20-ஆம் ஆண்டு அடுத்த அடுத்த ஐ.பி.எல் கோப்பைகளை கைப்பற்றியிருந்தார். இவ்வேளையில் இந்த ஆண்டு ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில் அந்த பட்டியலில் ரஜத் பட்டிதாரும் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement