நாக் – அவுட்டில் பெங்களூருவின் வெற்றிக்காக போராடிய ரஜத் படிதார் ! ரெய்னாவையும் மிஞ்சிய சூப்பர் சாதனை

Rajat Patidar 58
Advertisement

ஐபிஎல் 2022 தொடரின் நாக்-அவுட் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 27-ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாரான பேட்டியை வெளிப்படுத்தி 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக இளம் வீரர் ரஜத் படிடார் 58 (42) ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்ட ஓபேத் மெக்காய் மற்றும் பிரசித் கிருஷ்னா ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

faf

அதை தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய ஓபனிங் ஜோடி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அட்டகாசமான தொடக்கம் கொடுத்தது. அதில் ஜெய்ஸ்வால் 21 (13) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) ரன்களிலும் தேவதூத் படிக்கல் 9 (12) ரன்களிலும் அவுட்டானார்கள். ஆனால் மறுபுறம் நங்கூரமாக கடைசி வரை அவுட்டாகாமல் பெங்களூர் பவுலர்களை சொல்லி அடித்த ஜோஸ் பட்லர் 10 பவுண்டரி 6 சிக்சருடன் இந்த வருடத்தில் தனது 4-வது சதத்தை அடித்து 106* (60) ரன்கள் விளாசி மிரட்டல் பினிஷிங் கொடுத்தார். அதனால் 18.1 ஓவரிலேயே 161/3 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

வெளியேறிய பெங்களூரு:
அதன் காரணமாக மே 29இல் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் குவாலிபயர் 1 போட்டியில் தங்களுக்கு தோல்வியை பரிசளித்த குஜராத்தை மீண்டும் எதிர்கொண்டு கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த ராஜஸ்தான் தகுதி பெற்றது. இந்த வெற்றிக்கு 106* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு பந்துவீச்சிலும் போராட தவறியதால் இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

Jost Buttler 109

கடந்த 2008 முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அந்த அணியின் கனவு இந்த வருடமும் கனவாகவே போனது பெங்களூரு ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. அந்த அணியின் மோசமான பேட்டிங் தான் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு ஏற்கனவே பார்மின்றி தவிக்கும் விராட் கோலி 7 (8) ரன்களில் அவுட்டாகி மீண்டும் கைவிட்டார்.

- Advertisement -

போராடிய படிடார்:
அதனால் 9/1 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு எலிமினேட்டர் போட்டியில் 112* (54) ரன்கள் விளாசி காப்பாற்றிய இளம் வீரர் ரஜத் படிடார் அடுத்ததாக களமிறங்கி மீண்டும் அதிரடியாக பேட்டிங் செய்து 2-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தார். ஆனால் அவருக்கு கை கொடுக்க வேண்டிய கேப்டன் டு பிளசிஸ் டெஸ்ட் இன்னிங்ஸ் போல 25 (27) ரன்களில் அவுட்டானர். அந்த சமயத்தில் வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 24 (13) ரன்கள் எடுத்தாலும் திடீரென ஏமாற்றினார்.

Patidar

இருப்பினும் அதிரடியை கைவிட்டால் வெற்றி போய்விடும் என கருதிய ரஜத் படிடார் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்து 4 பவுண்டரி 3 சிக்சருடன் 58 (42) ரன்கள் குவித்து போராடி தனது வேலையை முடித்து அவுட்டானார். ஆனால் இந்த வருடம் முழுவதும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பினிஷிங் செய்து காப்பாற்றி வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்த முக்கியமான போட்டியில் 6 (7) ரன்களில் அவுட்டாக எஞ்சிய பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். சொல்லப்போனால் ரஜத் படிடார் அதிரடியால் முதல் 13 ஓவர்களில் 107/2 என்ற நிலைமையிலியிருந்த அந்த அணி கடைசி 7 ஓவர்களில் வெறும் 50/6 ரன்கள் மட்டும் எடுத்ததே தோல்வியை பரிசளித்தது.

- Advertisement -

ரெய்னாவை மிஞ்சி:
1. முன்னதாக அடுத்தடுத்த நாக் அவுட் போட்டிகளில் போராடிய நிலையில் எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 ஆகிய 2 நாக் – அவுட் போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த 2-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னாவுக்கு (54*, 87 – 2014இல்) பின் ரஜத் படிதார் (112*, 58 – 2022) பெற்றார்.

Rajat Patidar 112 2

2. மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் நடந்த பிளே ஆஃப் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ரஜத் படிடார் : 170* (2022)
2. முரளி விஜய் : 156 (2012)
3. ரிதிமான் சஹா :148 (2014)
4. சுரேஷ் ரெய்னா : 141 (2014)

இதையும் படிங்க : குவாலிபயர் போட்டியில் பெங்களூருவை நொறுக்கிய பட்லர் ! புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை – முழுபட்டியல் இதோ

3.மொத்தத்தில் இந்த வருட பிளே ஆப் சுற்றில் ரஜத் படிடார் தவிர வேறு எந்த பெங்களூரு பேட்ஸ்மேன்களும் பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்காததே அந்த அணி வீட்டுக்கு கிளம்ப காரணமாகும். எலிமினேட்டர் மற்றும் குவாலிபயர் 2 என 2 போட்டிகளில் அவர் மட்டும் தனியாளாக 10 சிக்ஸர்கள் அடிக்க எஞ்சிய பெங்களூரு பேட்ஸ்மேன் வெறும் 6 சிக்சர்கள் மட்டுமே அடித்ததே அதற்கு சாட்சியாகும்.

Advertisement