ஐபிஎல் 2022 : ராஜஸ்தான் அணி இவ்ளோ ஸ்ட்ராங்கா இந்த வருஷம் யாரு யாரெல்லாம் – இருக்காங்கனு பாருங்க

- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற 590 வீரர்களிலிருந்து இறுதியாக 204 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிசான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு சாதனை படைத்தார்.

rajasthan royals
Rajasthan Royals IPL

இந்த ஏலத்தில் வரலாற்றின் முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அதிகபட்சமாக இளம் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணாவை 10 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதைப்போல அந்த அணியில் வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் அதிக பட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிம்ரோன் ஹெட்மயர் 8.5 கோடிக்கு வாங்கப்பட்டார்.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ்:
முன்னதாக இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷாஹ்வி ஜெய்ஸ்வால் ஆகிய 3 வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் தக்க வைத்திருந்தது. இதையடுத்து நடைபெற்ற ஏலத்தின் முடிவில் அந்த அணியில் 24 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் 16 இந்திய வீரர்களும் 8 வெளிநாட்டு வீரர்களும் உள்ளார்கள். இவர்களை வாங்க செலவு செய்யப்பட்ட 89.05 கோடிகள் போக அந்த அணியிடம் 95 லட்சம் மீதித்தொகை உள்ளது.

rajasthan

ஐபிஎல் 2022 தொடருக்கான முழு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதோ:
சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி), பிரசித் கிருஷ்னா (10 கோடி), சிம்ரோன் ஹெட்மயேர் (8.5 கோடி), ட்ரெண்ட் போல்ட் (8 கோடி), தேவ்தூட் படிக்கல் (7.75 கோடி), யுஸ்வென்ற சஹால் (6.5 கோடி), ரவிச்சந்திரன் அஷ்வின் (5 கோடி), ரியன் பராக் (3.8 கோடி), நவ்தீப் சைனி(2.6 கோடி), நாதன்-கோல்டெர்-நைல் (2 கோடி), ஜேம்ஸ் நீசம் (1.5 கோடி), கருண் நாயர் (1.4 கோடி), ராசி வன் டேர் டுசென் (1 கோடி), டார்ல் மிட்செல் (75 லட்சம்), ஓபேத் மெக்காய் (75 லட்சம்), கேசி கரியப்பா (30 லட்சம்), அனுனாய் சிங் ( 20 லட்சம்), குல்தீப் சென் (20 லட்சம்), துருவ் ஜுரேல் (20 லட்சம்), தேஜாஸ் பரோகா (20 லட்சம்), குல்தீப் யாதவ் (20 லட்சம்), சுபம் கர்வால் (20 லட்சம்)

- Advertisement -

இந்த மெகா ஏலத்தின் முடிவில் மொத்த அணியில் இருந்து களத்தில் விளையாட சரியாக பொருந்த கூடிய திறமையான 11 வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்துக்கு உள்ளது. அந்த வகையில்

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முழு அணி – உத்தேச ப்ளேயிங் 11 இதோ

ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்க போகும் உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதோ:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர்* (கீப்பர்), தேவதூத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), சிம்ரோன் ஹெட்மயர்*, ரியன் பராக், ஜேம்ஸ் நீசம்*, ரவிச்சந்திரன் அஷ்வின், யூஸ்வென்ற சஹால், பிரசித் கிருஷ்னா, ட்ரெண்ட் போல்ட்*.

Advertisement