ஆல் ஏரியாவிலும் கில்லியாக எதிரணிகளை மிரட்டும் அணி இதுதான் : எல்லாவற்றிலும் முதலிடம், கப் வாங்குமா?

Chahal RR 5 For
- Advertisement -

கடந்த மார்ச் 26-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து ரசிகர்களுக்கு பல பரபரப்பான திரில்லர் தருணங்களை விருந்தாக படைத்து வருகிறது. இந்த 4 வாரங்களில் நடைபெற்ற நிறைய போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களை எகிற வைத்தது. அதிலும் மும்பை – சென்னை அணிகள் மோதிய போட்டிகளை போல ஒருசில போட்டிகள் கடைசி பந்து வரை சென்று ரசிகர்களை துள்ளிக்குதித்து கொண்டாட வைத்தது.

IPL 2022 (2)

- Advertisement -

மிரட்டும் ராஜஸ்தான்:
இதில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட குஜராத், லக்னோ போன்ற அணிகளுடன் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்ற பெங்களூரு அணியும் தொடர் வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் 4 இடங்களில் உள்ளன. ஆனால் அவை அனைத்திற்கும் முன்னோடியாக சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்து 10 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் வருடத்தில் ஜாம்பவான் ஷேன் வார்னே தலைமையில் வெறும் ஒரு சில நட்சத்திரங்களுடன் நிறைய அனுபவம் இல்லாத வீரர்களை வைத்துக் கொண்டு அட்டகாசமாக செயல்பட்ட அந்த அணி வரலாற்றின் முதல் ஐபிஎல் கோப்பையை வென்று முதல் சாம்பியனாக சரித்திரம் படைத்தது. ஆனால் அதன்பின் கடந்த 13 வருடங்களாக எவ்வளவோ போராடிய போதிலும் 2-வது கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் அந்த அணி இந்த வருடம் எப்படியாவது மீண்டும் 2-வது முறையாக கோப்பையை முத்தமிடும் முனைப்பில் எதிரணிகளுடன் பலப்பரிட்சை நடத்தி வருகிறது.

அனைத்திலும் முதலிடம்:
அந்த அணிக்கு பேட்டிங்கில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர், வெஸ்ட் இண்டீசின் சிம்ரோன் ஹெட்மையர், சஞ்சு சாம்சன், படிக்கள் ஆகியோர் அதிரடியாக ரன்களை குவிக்க வேகப்பந்துவீச்சில் ட்ரெண்ட், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தாங்கிப் பிடிக்கின்றனர். அதேசமயம் சுழல்பந்து வீச்சில் இரட்டை குழல் துப்பாக்கியாக தமிழகத்தின் அஷ்வின் மற்றும் சஹால் ஆகியோர் தங்களின் மாயாஜால சுழல்பந்துகளால் எதிரணிகளை திணறடிக்கின்றனர். அந்த வகையில் டெல்லிக்கு எதிராக ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற 34-லீக் போட்டிக்கு பின்பு புள்ளி பட்டியல், ஆரஞ்சு கோப்பை என அனைத்திலும் ராஜஸ்தான் முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்துவதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. முதலில் 10 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ராஜஸ்தான் ஜொலிக்கிறது.

Jos Buttler 116

2. அதற்கு காரணமாக 7 போட்டிகளில் 2 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 491* ரன்களை எடுத்துள்ள ஜோஸ் பட்லர் அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்கான ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

2. இந்த வருடம் இதுவரை ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் (116) பதிவு செய்த பேட்ஸ்மேன், அதிக சதங்கள் (3) அடித்த பேட்ஸ்மேன், அதிக பவுண்டரிகள் (41) அடித்த பேட்ஸ்மேன், அதிக சிக்சர்கள் (32)அடித்த பேட்ஸ்மேன் என்ற அனைத்து சாதனைகளையும் படைத்துள்ள ஜோஸ் பட்லர் அந்த அனைத்து பட்டியல்களிலும் ராஜஸ்தானை முதலிடம் பிடிக்க வைத்துள்ளார்.

Rajasthan Royals RR

3. அவர் மட்டுமே தனியாளாக 32 சிக்சர்களை அடித்துள்ள நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த அணிகளின் பட்டியலும் ராஜஸ்தான் முதலிடம் பிடிக்கிறது. மேலும் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் தொடர் நாயகனை தீர்மானிக்கும் (மோஸ்ட் வேல்யூபல் வீரர்) பட்டியலிலும் ஜோஸ் பட்லர் முதலிடம் பிடித்து ராஜஸ்தானுக்கு பெருமை சேர்க்கிறார்.

- Advertisement -

4. அதேபோல் பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தி வரும் யுஸ்வேந்திரா சஹால் 7 போட்டிகளில் 18* விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்கான ஊதா தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

Chahal RR

5. அதேபோல் இந்த வருடம் ஹாட்ரிக், ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள், ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சு போன்ற 3 பட்டியல்களிலும் சஹால் (கொல்கத்தாவுக்கு எதிராக, 5/40) முதலிடம் பிடித்துள்ளார். அந்த வகையில்  அந்த 3 பட்டியலிலும் அவர் ராஜஸ்தானுக்கு முதலிடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

6. மேலும் இந்த வருடம் இதுவரை நடந்த போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற பெருமையும் ராஜஸ்தான் பெற்றுள்ளது. (222/2, டெல்லிக்கு எதிராக).

இதையும் படிங்க : அவரு மட்டும் கிரவுண்ட்ல இருந்தா பண்ட் இப்படி பண்ணியிருக்க மாட்டாரு – விளாசிய கெவின் பீட்டர்சன்

7. அதேபோல் ஃபேர் ப்ளே அவார்ட் பட்டியலிலும் ராஜஸ்தான் தான் முதலிடம் பிடித்துள்ளது. இப்படி அனைத்து பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ராஜஸ்தான் இந்த வருடம் கோப்பையை வென்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement