அவரு மட்டும் கிரவுண்ட்ல இருந்தா பண்ட் இப்படி பண்ணியிருக்க மாட்டாரு – விளாசிய கெவின் பீட்டர்சன்

Pietersen
- Advertisement -

டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 34-வது லீக் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் கடைசி ஓவரின் போது வெற்றிக்கு 6 பந்துகளில் 36 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரில் 6 சிக்சர்கள் தொடர்ச்சியாக அடிக்கப்பட்டால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் டெல்லி அணிக்கு இருந்தது. அப்போது களத்தில் இருந்த டெல்லி அணியின் அதிரடி ஆட்டக்காரரான ராவ்மன் பவல் அந்த கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார்.

Umire Rovman Powell

- Advertisement -

இதன் காரணமாக போட்டியில் பரபரப்பு கூடியது. அதிலும் குறிப்பாக மெக்காய் வீசிய 3-வது பந்தை பேட்ஸ்மேன் புல்டாசாக எடுத்து சிக்சர் அடித்து இருந்தார். ஆனால் அந்த பந்து நோ பால் இல்லை என்று அம்பயர் சொன்னது மைதானத்தில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது என்றே கூறலாம். ஏனெனில் ரீப்ளேவின் போது தெளிவாக நோபால் என்று தெரியவந்ததால் டெல்லி அணியின் வீரர்கள் மிகவும் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதிலும் குறிப்பாக டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் போட்டியை நிறுத்திவிட்டு மீண்டும் வருமாறு வீரர்களை நோக்கி சைகை காண்பித்தார். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. அதுமட்டுமின்றி மைதானத்தில் பெரிய அளவு பரபரப்பும் ஏற்பட்டது. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அம்பயர்கள் அந்த பந்தினை நோபால் இல்லை என்று கூறியதால் மீண்டும் ஆட்டம் தொடரப்பட்டு டெல்லி அணி தோல்வியை சந்தித்தது.

Ponting

இந்த போட்டியில் ரிஷப் பண்ட்டின் செயல்பாடு பல்வேறு வீரர்களுக்கும் அதிருப்தியை அளித்து இருந்தது. இந்நிலையில் பண்ட் மைதானத்தில் நடந்து கொண்ட விதம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிக்கி பாண்டிங் டெல்லி அணியுடன் இணைந்து இருந்தால் நிச்சயம் ரிஷப் பண்ட்டை இப்படி நடந்திருக்க விட்டிருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

- Advertisement -

மேலும் ப்ரவின் ஆம்ரேவை மைதானத்திற்குள் அனுப்பி விவாதத்தை நடத்தியது எல்லாம் தவறு. இது கிரிக்கெட்டிற்கு சரியான நடத்தை கிடையாது. நாம் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டை விளையாடுகிறோம் என்று யோசித்து கொண்டால் நல்லது என பண்ட்டை பீட்டர்சன் கடுமையாக சாடியுள்ளார். அதே வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸாருதீனும் பண்டின் செயலை கண்டித்து கூறுகையில் :

இதையும் படிங்க : அம்பயருடன் வாக்குவாதம் செய்த ரிஷப் பண்ட், தாகூருக்கு அபராதம் ! பயிற்சியாளருக்கு தடை – முழு விவரம் இதோ

டெல்லி அணியின் இந்த நடத்தை மிகவும் மோசமானது. கிரிக்கெட் என்றால் ஜென்டில்மேன் விளையாட்டு இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறியுள்ளார். டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது காரணமாக அவர் நேற்றைய போட்டியில் அணி வீரர்களுடன் இணைந்து இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement