அம்பயருடன் வாக்குவாதம் செய்த ரிஷப் பண்ட், தாகூருக்கு அபராதம் ! பயிற்சியாளருக்கு தடை – முழு விவரம் இதோ

Parvin Amre Umpire
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 22-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற பரபரப்பான 34-வது லீக் போட்டியில் டெல்லியை பதம்பார்த்த ராஜஸ்தான் வெறும் 15 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்தது புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 222/2 ரன்களை அதிரடியாக குவித்து இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.

Jos Buttler Padikkal

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் முதல் ஓவரிலிருந்தே பட்டாசான பேட்டிங்கை வெளிப்படுத்தி 9 பவுண்டரி 1 சிக்சர் உட்பட சதமடித்து 116 (65) ரன்கள் குவித்தார். அவருடன் தேவ்தூத் படிக்கள் அதிரடியாக 7 பவுண்டரி 2 சிக்சருடன் 54 (35) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் மிரட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 46* (19) ரன்கள் எடுத்து மிரட்டலான பினிஷிங் கொடுத்தார்.

டெல்லி தோல்வி:
அதை தொடர்ந்து 223 என்ற பெரிய இலக்கை துரத்திய டெல்லிக்கு பிரிதிவி ஷா 37 (27), டேவிட் வார்னர் 28 (14) ஆகிய தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களை சேர்க்க அடுத்து வந்த சர்பராஸ் கான் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் நடுவரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக 44 (24) ரன்களும் லலித் யாதவ் 37 (24) ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த அக்சர் படேல் 1 (4) ஷார்துல் தாகூர் 10 (7) ஆகியோர் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார்கள்.

Rajasthan Royals RR

இறுதியில் ரோமன் போவல் அதிரடியாக 5 சிக்சர் உட்பட 36 (15) ரன்கள் குவித்த போதிலும் 20 ஓவர்களில் 207/8 ரன்களை மட்டுமே எடுத்து டெல்லி போராடி தோல்வியடைந்தது. ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகள் எடுக்க இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த தோல்வியால் பங்கேற்ற 7 போட்டிகளில் 4-வது தோல்வியை பதிவு செய்த டெல்லி 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

அபராதம் – தடை:
முன்னதாக இந்த போட்டியின் கடைசி ஓவரில் அம்பயர் நோ-பால் வழங்காதது சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது வெற்றிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்ட போது ஓபேத் மெக்காய் வீசிய அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் டெல்லியின் ரோவ்மன் போவல் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார். அதில் 3-வது பந்தை புல் டாசாக வீசப்பட்ட நிலையில் அதை போவல் சிக்சர் அடித்த போதிலும் அந்த பந்து இடுப்புக்கு மேலே வந்தது. அதன் காரணத்தால் நோ பால் என்று அம்பயர் அறிவிக்காமல் மௌனம் காத்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதனால் கோபமடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் உடனடியாக களத்தில் இருந்த குல்தீப் யாதவ் ரோவ்மன் போவெல் ஆகியோரை பெவிலியனுக்கு வருமாறு அழைத்தார். அதே சமயத்தில் டெல்லியின் துணை பயிற்சியாளர் பர்வீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதனால் பரபரப்பு ஏற்பட்ட அந்த சூழ்நிலையில் 3-வது அம்பையரை தொடர்பு கொள்ளாமல் தன்னிச்சையாக தவறான தீர்ப்பு வழங்கி அம்பயர் தனது முடிவில் விடாப்பிடியாக நின்று டெல்லி வீரர்களை களத்திற்கு வெளியே அனுப்ப மறுத்தார்.

- Advertisement -

அதன் காரணமாக எஞ்சிய போட்டி சர்ச்சைக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது. இருப்பினும் தெளிவாக நோ-பால் என தெரிந்தும் அவுட் கொடுக்காத அம்பயரை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர். மேலும் கிரிக்கெட்டில் அம்பயரின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது இறுதியானது என தெரிந்தும் அதை மதிக்காமல் நடந்து கொண்ட ரிஷப் பண்ட்டை அவ்வாறு எப்படி நடந்து கொள்ளலாம் என்று அதே ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வால் ஐபிஎல் நிர்வாகம் தற்போது அதிரடியான முடிவை எடுத்துள்ளது. அதன்படி.

amre 1

1. அம்பயர் தீர்ப்பை மதிக்காமல் நடந்து கொண்ட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு அவரின் போட்டி சம்பளத்தில் இருந்து 100% சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 1.5 கோடியாகும்.

2. அவருக்கு அருகில் நின்று அம்பையர் தீர்ப்பை எதிர்த்த மற்றொரு டெல்லி வீரர் சர்துல் தாகூருக்கு 50% சம்பளம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

3. ஆனால் அவர்களைக் காட்டிலும் மைதானத்திற்குள் நேரடியாக நுழைந்து அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லியின் துணை பயிற்சியாளர் பர்வின் ஆம்ரேவுக்கு போட்டிக்கான 100% சம்பளத்தையும் அபராதமாக விதித்ததுடன் அடுத்த போட்டியில் பங்கேற்க அதிரடியான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement