அண்டர் 19 உலககோப்பையில் சரித்திர சாதனையை நிகழ்த்திய இளம்வீரர் – விவரம் இதோ

Raj-bawa
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் 14-வது ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் சாம்பியன் இந்தியா தனது முதல் 2 லீக் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வெற்றி பெற்று அசத்தியது. இதை தொடர்ந்து தனது 3-வது லீக் போட்டியில் கத்துக்குட்டியான உகாண்டா அணியை நேற்று இரவு சந்தித்தது. வெஸ்ட் இண்டீஸ் உள்ள டிரினிடாட் நகரில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற உகாண்டா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

u 19 3

- Advertisement -

கதறவிட்ட இந்தியா:
இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய இந்தியாவிற்கு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் 15 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த நிஷாந்த் சித்துவும் 15 ரன்களில் அவுட்டானர். ஆனால் அடுத்து வந்த ராஜ் பாவா உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் அங்கிரிஸ் ரகுவன்ஷி ஆகியோர் பந்துவீச்சாளர்களை கருணையே இல்லாமல் நாலாபுறமும் சிதறி அடிக்கத் தொடங்கினார்.

தொடக்கத்தில் மெதுவாக விளையாட துவங்கிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல உகாண்டா பந்துவீச்சாளர்கள் போதும் போதும் என சொல்லும் அளவுக்கு சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்கவிட்டனர். தொடர்ந்து பட்டையை கிளப்பிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்திருந்த நிலையில் 120 பந்துகளில் 22 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட சதம் விளாசிய ரகுவன்ஷி 144 ரன்களில் ஆட்டமிழந்தார்.

u 19 -1

இந்தியா 405 ரன்கள்:
ஆனால் மறுபுறம் தொடர்ந்து பட்டையை கிளப்பிய ராஜ் பாவா 108 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட சதம் விளாசி 162* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்களின் அபார ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த இந்தியா 405 ரன்கள் குவித்து மிரட்டியது.

- Advertisement -

இதை அடுத்து 406 என்ற இமாலய இலக்கை துரத்திய உகாண்டா இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் வெறும் 79 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் நிஷாந்த் சித்து 4 விக்கெட்களை சாய்த்தார்.

u 19 -2

இதன் வாயிலாக 326 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா இந்த உலககோப்பையில் பங்கேற்ற 3 லீக் போட்டிகளிலும் 3 வெற்றிகளை பெற்று ஹாட்ரிக் வெற்றியுடன் குரூப் பி பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

- Advertisement -

வங்கதேசத்தை பழி வாங்குமா:
இந்த அடுத்தடுத்த 3 வெற்றிகளால் இந்த உலகக்கோப்பையின் காலிறுதி சுற்றுக்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதில் வரும் ஜனவரி 29ஆம் தேதி நடைபெற உள்ள 2வது காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா அந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியனாக இருக்கும் வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.

இதையும் படிங்க : அரைசதம் அடித்ததை தனது மகளுக்காக அர்ப்பணித்த விராட் கோலி – முதன்முறையாக வெளியான வாமிகாவின் முகம்

கடந்த 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருந்த இந்தியாவை கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலகக்கோப்பையின் பைனலில் தோற்கடித்த வங்கதேசம் முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. எனவே அந்த வரலாற்று தோல்விக்கு இந்த முறை இந்தியா பதிலடி கொடுக்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முன்னதாக இப்போட்டியில் 162* ரன்கள் விளாசிய ராஜ் பாவா ஐசிசி அண்டர் – 19 உலக கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சரித்திர சாதனையுடன் ஆட்ட நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement