ராய்ப்பூரில் இந்தியாவுக்கு வரவிருந்த.. மிகப்பெரிய அவமானத்தை அப்படியே அமுக்கிய பிசிசிஐ

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று முன்னிலை பெற்றது. இருப்பினும் 3வது போட்டியில் வென்று பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிசம்பர் 1ஆம் தேதி ராய்ப்பூரில் நடைபெற்ற 4வது போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரிங்கு சிங் 46, ஜித்தேஷ் சர்மா 35, ஜெயஸ்வால் 27 ரன்கள் எடுத்த உதவியுடன் 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

அமுக்கிய பிசிசிஐ:
அந்தளவுக்கு பந்துவீச்சில் கட்டுக்கோப்பாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதனால் 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே வென்றுள்ள இந்தியா 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை கொடுத்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

முன்னதாக இப்போட்டி நடைபெற்ற ராய்ப்பூர் நகரில் இருக்கும் மைதானத்தில் வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போது தான் ஒரு டி20 போட்டி நடைபெற்றது. குறிப்பாக சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் நகரில் இருக்கும் ஷாஹித் வீர் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொங்கி 11 மணிக்குள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

ஆனால் அந்த மைதானத்தில் சமீபத்திய வருடங்களில் பெரிய அளவில் சர்வதேச போட்டியில் நடைபெறாத காரணத்தால் 3.16 கோடி மின்சாரக் கட்டண தொகை செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சொல்லப்போனால் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அம்மைதான நிர்வாகம் மின்சார தொகையை செலுத்தவில்லை. அதனால் ராய்ப்பூர் மைதானத்திற்கு கடந்த 5 வருடங்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இருப்பினும் பல வருடங்கள் கழித்து உங்களுடைய மாநிலத்தில் நடைபெறும் போட்டியை எப்படியாவது நடத்திக் கொடுங்கள் என்று சத்தீஸ்கர் மாநில வாரியத்திற்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் தற்காலிகமாக இப்போட்டி நடைபெறும் அளவுக்கு மட்டும் அம்மாநில வாரியம் மின்சார இணைப்பு இல்லாமல் ஜெனரேட்டர்கள் உதவியுடன் ராய்ப்பூர் மைதானத்தில் மின்விளக்குகளை ஒளிர வைத்து போட்டியை முடித்தது.

இதையும் படிங்க: பனியின் தாக்கத்தை அதை வெச்சு சமாளிக்கலாம்.. ஆட்டநாயகன் விருது வெல்ல காரணம் அது தான்.. அக்சர் படேல்

மொத்தத்தில் அந்த பிரச்சனையை சமாளித்த பிசிசிஐ நேரலையில் மைதானம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் போட்டி தடைபடக்கூடிய அவமானத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றியது என்றே சொல்லலாம். ஆனால் இதை பார்க்கும் ரசிகர்கள் உலகின் பணக்கார வாரியமாக இருக்கும் பிசிசிஐ தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு மைதானத்தில் 5 வருடங்களாக மின்சார கட்டணம் கூட செலுத்தப்படாமல் இருப்பதை நினைத்து அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement