பனியின் தாக்கத்தை அதை வெச்சு சமாளிக்கலாம்.. ஆட்டநாயகன் விருது வெல்ல காரணம் அது தான்.. அக்சர் படேல்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியாவுக்கு 3வது போட்டியில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா அவ்வளவு எளிதில் எங்களை சாய்த்து விட முடியாது என்பதை காட்டி பதிலடி கொடுத்தது.

ஆனால் டிசம்பர் 1ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற முக்கியமான 4வது போட்டியில் மீண்டும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

பனியின் தாக்கம்:
அதிகபட்சமாக இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் அதிரடியாக 46, ஜித்தேஷ் சர்மா 35, ஜெயஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக துவார்சுய்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 175 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 154/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மேத்தியூ வேட் 36* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3, தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை சாய்ந்தனர். இந்த வெற்றிக்கு 4 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அக்சர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 2023 உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறிய நேரங்களில் வீட்டிலிருந்தே பனியின் தாக்கத்தை தவிர்த்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டது தற்போது சிறப்பாக செயல்பட உதவுவதாக தெரிவிக்கும் அக்சர் பட்டேல் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“வீட்டில் இருந்த போது நான் நிறைய அம்சங்களை முயற்சித்தேன். அவை இன்று நன்றாக வந்தது. குறிப்பாக என்னுடைய பலத்தின் அடிப்படையில் பந்து வீசிய நான் அதற்காக சில முறை அடி வாங்கினாலும் கவலைப்படாமல் செயல்பட்டேன். மேலும் ஸ்டம்ப் லைனில் வீசினால் பனியின் தாக்கத்தை தவிர்க்க முடியும் என்பதையும் உணர்ந்து செயல்பட்டேன்”

இதையும் படிங்க: இந்திய அணிக்கெதிரான 4-ஆவது போட்டியில் நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் – ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டி

“பொதுவாக டி20 கிரிக்கெட்டில் நீங்கள் அடி வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அட்டாக் செய்யும் மனநிலையுடன் பந்து வீச வேண்டும். அதை பின்பற்றி சில விக்கட்டுகளை நீங்கள் எடுத்தால் நல்ல உணர்வை கொடுக்கும். காயத்தை சந்தித்த தருணங்களில் நான் என்னை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தினேன். குறிப்பாக என்னுடைய பந்து வீச்சில் சில வேரியசன்களை கொண்டு வந்தது தற்போது வெற்றிகரமாக செயல்பட உதவியது” என்று கூறினார்.

Advertisement