இந்திய அணிக்கெதிரான 4-ஆவது போட்டியில் நாங்கள் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் – ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டி

Wade
- Advertisement -

மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது ராய்ப்பூர் நகரில் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை குவித்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு சேர்த்து இந்து தொடரையும் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் இலக்கினை நோக்கி முன்னேற முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4 ஆவது போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இந்த தோல்வியின் மூலம் பல்வேறு பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். அதோடு எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வருவதால் இதிலிருந்து சில நேர்மறையான விடயங்களை கற்றுக்கொள்ள விரும்புவதாக மேத்யூ வேட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement