ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4 ஆவது போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் இதுதான் – சூரியகுமார் யாதவ் பேட்டி

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது டி20 போட்டியானது ராய்ப்பூர் நகரில் டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு சேர்த்து இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் டாசில் மட்டுமே தோல்வியை சந்தித்தோம். அதை தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சரிவை சந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். எங்களது அணியின் வீரர்கள் இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொருவருமே பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே அனைவரும் பேசினேன். அந்த வகையில் நமது அணியின் வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க : ஆஸியை வீழ்த்திய இந்தியா.. பாகிஸ்தானின் சாதனையை தூளாக்கி புதிய உலக சாதனை வெற்றி

குறிப்பாக அக்சர் பட்டேல் கடினமான இந்த சூழ்நிலையிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அதேபோன்று கடைசி கட்டத்திலும் நமது அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தால் வெற்றி பெற முடிந்தது எனக் சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement