ஆஸியை வீழ்த்திய இந்தியா.. பாகிஸ்தானின் சாதனையை தூளாக்கி புதிய உலக சாதனை வெற்றி

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 4வது போட்டி டிசம்பர் 1ஆம் தேதி இரவு 7 மணிக்கு ராய்ப்பூர் நகரில் துவங்கியது. அதில் ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்தியாவுக்கு எதிராக 3வது போட்டியில் வெற்றியை பதிவு செய்தது போலவே இப்போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முடிந்தளவுக்கு போராடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவரில் 174/9 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 37, ருதுராஜ் 32 ரன்கள் குவித்து ஓரளவு நல்ல துவக்கத்தை கொடுத்த போதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் 8, சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

சாதனை வெற்றி:
இருப்பினும் லோயர் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் 4 பவுண்டர் 2 சிக்சருடன் 46 (29) ரன்களும் ஜிதேஷ் சர்மா 1 பவுண்டர் 3 சிக்சருடன் 35 (19) ரன்கள் விளாசி ஓரளவு இந்தியாவை காப்பாற்றிய நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக துவார்சுய்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 175 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இம்முறை நேர்த்தியாக செயல்பட்டு இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து அழுத்தத்தை கொடுத்தனர்.

குறிப்பாக ட்ராவிஸ் ஹெட் 31 (16) ரன்கள் அச்சுறுத்தலை கொடுத்த போது அக்சர் பட்டேல் சுழலில் சிக்கினார். ஆனால் அவரைத் தவிர்த்து ஜோஸ் பிலிப் 8, பென் டெக்மொர்ட் 19, ஆரோன் ஹார்டி 8, டிம் டேவிட் 19, கேப்டன் மேத்தியூ ஷார்ட் 21 என முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

இறுதியில் 20 ஓவர்களில் 154/ ரன்கள் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலியா கடுமையாக போராடியும் வெற்றி காண முடியவில்லை. அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக விளையாடிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.

இதையும் படிங்க: கல்யாணம் முடிஞ்ச கையோடு அணிக்கு திரும்பிய இந்திய வீரர். இப்படி ஒரு கடமை உணர்ச்சியா – ரசிகர்கள் வாழ்த்து

குறிப்பாக 2023 உலக கோப்பையில் சந்தித்த தோல்விக்கு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியாவை தோற்கடித்து பதிலடி கொடுத்துள்ளனர். அதை விட 2006 முதல் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்தியா இதையும் சேர்த்து 136வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் 135, நியூசிலாந்து 102 வெற்றிகளைபெற்று அடுத்த இடங்களில் உள்ளது.

Advertisement