கல்யாணம் முடிஞ்ச கையோடு அணிக்கு திரும்பிய இந்திய வீரர். இப்படி ஒரு கடமை உணர்ச்சியா – ரசிகர்கள் வாழ்த்து

Mukesh
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது போட்டி டி20 போட்டியானது இன்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்னயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களையும், ஜெயிஸ்வால் 37 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டன.

அந்த வகையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் திலக் வர்மாவிற்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரும், பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக தீபக் சாகரும் இடம் பிடித்தனர்.

- Advertisement -

அதேபோன்று கடைசி மாற்றமாக கடந்த போட்டியின் போது தனது திருமணம் காரணமாக விடுப்பு எடுத்துக் கொண்ட முகேஷ் குமார் இன்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக இடம் பிடித்திருந்தார், தனது திருமணம் முடிந்த அடுத்த சில தினங்களிலேயே இந்திய அணிக்கு திரும்பிய அவர் நான்காவது போட்டியின் பிளேயிங் லெவனில் பங்கேற்று தற்போது விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : விராட் கோலி அந்த இந்திய ஜாம்பவான் பாதையில் போயிட்டு இருக்காரு.. லாரா பாராட்டு

பொதுவாகவே திருமணம் முடிந்து மாத கணக்கில் விடுப்பு எடுத்துக் கொள்ளும் வீரர்களின் மத்தியில் கல்யாணம் முடிந்த அடுத்த நாளிலேயே இந்திய அணிக்கு திரும்பிய முகேஷ் குமாரின் அர்ப்பணிப்பை தற்போது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். அதோடு கடந்த போட்டியின் போது டெத் ஓவர்களில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு தற்போது முகேஷ் குமாரின் வருகை பலம் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement