
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எனவே டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக இது விராட் கோலிக்கு கடைசி தொடர். இதன் பிறகு வரும் போட்டிகளில் இந்திய அணிக்காக பேட்ஸ்மேனாக தொடரப்போவதாகவும் தனது பணிச் சுமையைக் குறைப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா விராத் கோலிக்காக இந்திய வீரர்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அதன்படி விராட் கோலி இந்த உலக கோப்பை தொடரில் கேப்டனாக கடைசியாக விளையாடுகிறார். நிச்சயம் அடுத்த முறை அவர் கேப்டனாக விளையாடுவாரா ? என்பது உறுதி அல்ல.
எனவே இந்த உலகக் கோப்பையை வென்று கோலிக்காக நீங்கள் வழங்க வேண்டும் என்று இந்திய வீரர்களும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ளனர். இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் என்ன சூழல் இருக்கும் என்பதை நன்றாக புரிந்து வைத்திருப்பார்கள். இந்திய அணியை போன்றே பாகிஸ்தான் அணியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக செயல்படும் அணிதான்.
ஆசிய அணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்கள் பெரிய மாறுதல்களை தராது என்பதனால் அனைவருமே பலமாகத்தான் இருப்பார்கள். இருப்பினும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு விராத் கோலிக்கு கோப்பையை கைப்பற்றி தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் இந்திய அணி 20 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் மோதுகிறது.
இதையும் படிங்க : இந்திய அணியின் மென்டாராக தனது வேலையை துவங்கிய தல தோனி – வைரலாகும் புகைப்படங்கள்
பின்னர் 24-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. தோனிக்கு பிறகு 2016 ஆம் ஆண்டு டி20 கேப்டன் பதவி ஏற்ற விராட் கோலி 45 சர்வதேச டி20 போட்டிகளில் தலைமை வகித்துள்ளார். அதில் 27 வெற்றிகளையும் 14 தோல்விகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.