இந்திய அணியின் மென்டாராக தனது வேலையை துவங்கிய தல தோனி – வைரலாகும் புகைப்படங்கள்

Dhoni-4
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி (நேற்று) முதல் டி20 உலகக் கோப்பை தொடரானது துவங்கியுள்ளது. ஓமன் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த பின்னர் முக்கிய ஆட்டங்கள் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கின்றன. இந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்திய அணி இந்த தொடரில் எவ்வாறு செயல்படப் போகிறது ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

chahar 1

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனியும் நியமிக்கப்பட்டுள்ளதால் அவரின் செயல்பாடும் இந்திய அணியில் எந்த எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது ? என்பதையும் கவனிக்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 24-ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் இந்திய அணி தற்போது துபாயில் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளன. இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய பயிற்சி போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர், விக்ரம் ரத்தோர் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

dhoni mentor 1

dhoni mentor

அப்போது அணியின் ஆலோசகரான தோனியும் வீரர்கள் பயிற்சி செய்த இடத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து சில புகைப்படங்களை பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருப்பார் – கேப்டன் பொல்லார்ட் உறுதி

ஏற்கனவே 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய அனுபவமுள்ள தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் கோப்பையை கைப்பற்றியுள்ளதால் நிச்சயம் அவரது ஆலோசனைகள் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதனால் அவர் இந்திய அணியுடன் தற்போது இருக்கிறார்.

Advertisement