- Advertisement -
ஐ.பி.எல்

டெல்லியில் அவங்க ரெண்டு பேரையும் ஒன்னா பாத்தேன்.. சி.எஸ்.கே-வில் பெரிய சம்பவம் காத்திருக்கு – சுரேஷ் ரெய்னா ஹின்ட்

இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தால் நேற்று அனைத்து அணிகளும் தங்களது அணிகளில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தன.

ஒருவர் கட்டாயம் மஞ்சள் ஜெர்சியில் விளையாடுவார் :

அதில் ஒரு சில அணிகள் எடுத்த முடிவு அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக டெல்லி அணியில் இடம் பிடித்து விளையாடி வந்த கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.

- Advertisement -

டெல்லி அணியின் நிர்வாகம் சார்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டுமே அந்த அணி தக்கவைத்தது. இந்நிலையில் ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை பேசி வரும் வேளையில் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட அதிருப்திதான் அந்த அணியிலிருந்து அவர் வெளியேற காரணமாக கூறப்படுகிறது.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த அணியின் நிர்வாகம் மாறிக் கொண்டிருப்பது அணியின் சூழலை பாதிப்பதாகவும் அந்த விஷயத்தாலே பண்ட் வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அவரை பல கோடி கொடுத்து வாங்க மற்ற அணிகள் காத்திருக்கின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது :

- Advertisement -

நான் அண்மையில் டெல்லி சென்று இருந்தேன். அப்போது அங்கு தோனியை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் ரிஷப் பண்டும் அருகில் இருந்தார். என்னை பொறுத்தவரை கட்டாயமாக மஞ்சள் ஜெர்சியுடன் விரைவில் ஒருவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடப்போகிறார் என்று சுரேஷ் ரெய்னா சூசகமாக கூறினார். ரெய்னா கூறியதை வைத்து பார்க்கும்போது :

இதையும் படிங்க : ஓய்வெல்லாம் கிடையாது.. பும்ரா 3 ஆவது போட்டியில் விளையாடாததுக்கு காரணம் இதுதான் – வெளியான தகவல்

ரிஷப் பண்ட்டை சிஎஸ்கே அணி தேர்வு செய்ய தான் தோனியும் ரிஷப் பண்டும் டெல்லியில் சந்தித்து பேசியதாகும் நிச்சயம் தோனி இந்த ஆண்டு ஓய்வு பெற்றுவிடுவார் என்பதனால் பண்ட்டை அந்த இடத்திற்கு கொண்டு வருவதற்காகவே தோனி அவரிடம் பேசி இருக்கலாம் என்று தெரிகிறது. இதன் காரணமாக 55 கோடி மட்டுமே கையில் வைத்து ஏலத்திற்கு செல்லும் சிஎஸ்கே பெரிய தொகைக்கு ரிஷப் பணட்டை வாங்கும் என்று தெரிகிறது.

- Advertisement -