இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஏற்கனவே இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய இந்திய அணியானது இந்த தொடரை இழந்தது. அதனை தொடர்ந்து மூன்றாவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
பும்ரா இடம்பெறாததுக்கு காரணம் என்ன? :
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் முதலில் பேட்டிங்கை செய்தார். இத்தகாரணமாக நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இடம்பெறவில்லை. முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடியிருந்த அவர் இப்படி மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விளையாடாததற்கு காரணம் அடுத்தடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் தேவைப்படும் ஓய்வு தான் என்று பலராலும் பேசப்பட்டது.
ஆனால் பும்ரா இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாததற்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த போட்டிக்கு முன்னதாக பும்ராவிற்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவரை மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் டாசுக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவும் : பும்ரா உடல் நலம் சரியில்லாததால் தான் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை என்று அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025: கேப்டனாக விராட் கோலி? ஆண்டி ப்ளவர் சூசகம்.. ஆர்சிபி தக்க வைத்த வீரர்கள் லிஸ்ட் இதோ
பும்ரா இந்த மூன்றாவது போட்டியில் விளையாடாததன் காரணமாக அவருக்கு பதிலாக மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



