அவரை விட வேற யாரும் அந்த இடத்திற்கு கரெக்ட்டா இருக்க மாட்டாங்க – ஜடேஜாவை வாழ்த்திய ரெய்னா

raina
- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனைத்து அணிகளும் தற்போது மும்முரமாக தயாராகி வருகிறது. நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் நேற்று திடீரென சென்னை அணியின் கேப்டன் தோனி தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் முழு சீசனும் நடைபெறாத வேளையில் இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் போட்டி துவங்க ஓரிரு நாட்கள் இருந்த நிலையில் தோனி பதவி விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் ஒருபுறம் ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய நட்சத்திர வீரராக விளையாடி வரும் ஜடேஜா தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் காரணமாக இம்முறை சிஎஸ்கே அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை சிஎஸ்கே அணியை வழிநடத்தி இவர்களின் பட்டியலில் தோனி ரெய்னாவை தொடர்ந்து மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.

அதோடு தோனிக்கு பிறகு இரண்டாவது முழுநேர கேப்டன் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். சென்னை அணியின் துணை கேப்டனாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சுரேஷ் ரெய்னா இம்முறை தக்கவைக்க படாததால் அவருக்கு பதிலாக தற்போது ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ள சின்னத்தல சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜடேஜாவை வாழ்த்தி சில கருத்துகளை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : என் சகோதரனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கியதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இருவரும் இந்த அணியில் ஒரே தலைமையின் கீழ் வளர்ந்தோம்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் குறிப்பிட்ட அணிகளை பந்தாடி அதிக ரன்களை குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

அந்த அணியை இப்போது அவர் தலைமையேற்று வழி நடத்த இருப்பது மிகவும் மகிழ்ச்சி. அவரை விட சிறப்பான ஒரு வீரர் இந்த தலைமைப் பொறுப்பை ஏற்க யார் இருப்பார்கள். நிச்சயம் ஜடேஜா இதற்கு தகுதியானவர் எனது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம் என்று ஜடேஜா குறித்து ரெய்னா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement