ஐபிஎல் வரலாற்றில் குறிப்பிட்ட அணிகளை பந்தாடி அதிக ரன்களை குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

Rcbvsmi
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இம்முறை மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும் இந்த தொடரில் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.

Ganguly-ipl
IPL MI

அட நம்ம அய்யாச்சாமி:
பொதுவாக கிரிக்கெட்டில் ஒருசில வீரர்களுக்கு ஒரு சில எதிரணிகளை ரொம்பவும் பிடிக்கும். இவர்கள் மற்ற அணிகளுக்கு எதிராக தடுமாறினாலும் கூட மோசமான பார்மில் இருந்தாலும் கூட தமக்கு பிடித்த எதிரணி என்று வந்துவிட்டால் உடனடியாக விஸ்வரூபம் எடுத்து ரன்களை விளாசுவார்கள். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மனுக்கு ஆஸ்திரேலியா என்றால் மிகவும் பிரியம்.

- Advertisement -

சொல்லப்போனால் உலகின் இதர அணிகளை மிரட்டிய ஆஸ்திரேலியாவையே மிரட்டிய ஒரு வீரர் என்றால் அது விவிஎஸ் லக்ஷ்மன் என்பதில் சந்தேகமில்லை. அதுபோல ஐபிஎல் தொடரிலும் ஒரு சில வீரர்கள் ஒரு சில குறிப்பிட்ட அணிகளுக்கு எதிராக அதிக ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார்கள். அந்த பட்டியலைப் பற்றி பார்ப்போம்.

VVS

1. ரோஹித் சர்மா – கேகேஆர்: இந்தியாவின் இப்போதைய கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். கடந்த 2013 முதல் இப்போது வரை அந்த அணிக்காக விளையாடி வரும் அவருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்றால் மிக மிக பிடிக்கும் எனக் கூறலாம்.

- Advertisement -

அந்த அணியை கண்டாலே விஸ்வரூபம் எடுத்து பேட்டிங்கில் பட்டைய கிளப்பும் அவர் இதுநாள் வரை 1015 ரன்களை விளாசியுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்களை குவித்த முதல் வீரர் மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Rohith

2. விராட் கோலி – சிஎஸ்கே: 6283 ரன்களைக் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆரம்பம் முதல் இன்றுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். பொதுவாகவே அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படக்கூடிய அவர் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் என வந்து விட்டால் ஒருபடி மேலே சென்று வழக்கத்தை விட அதிகமான ரன்களை குவித்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் இதுநாள் வரை 948 ரன்களை அடித்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் வலுவான அணியாக கருதப்படும் சென்னைக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

viratkohli

3. டேவிட் வார்னர் – பஞ்சாப்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆரஞ்சு தொப்பிகளை வென்ற வீரர் (3 முறை) என்ற மாபெரும் சாதனை படைத்தவர்.

- Advertisement -

ஒரு ஓபனிங் பேட்ஸ்மேனாக எதிர் அணிகளை வெளுக்கும் அவர் மற்ற அணிகளை காட்டிலும் பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் சற்று அதிகப்படியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை 945 ரன்களை விளாசியுள்ளார். இதன் வாயிலாக பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

Warner

4. டேவிட் வார்னர் – கேகேஆர்: பஞ்சாப் அணியை போலவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கண்டால் டேவிட் வார்னருக்கு மிகவும் பிடிக்கும் என கூறலாம். அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிராக 915 ரன்களை அடித்துள்ள அவர் இந்த பட்டியலில் மீண்டும் 4-வது இடத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

5. விராட் கோலி – டெல்லி கேபிட்டல்ஸ்: சென்னையை போலவே வரலாற்றில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை புரட்டி எடுத்த விராட் கோலி அந்த அணிக்கு 904 ரன்களை குவித்து இந்த பட்டியலில் மீண்டும் தனது பெயரை 5-வது இடத்தில் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Advertisement