யாரையும் குறை சொல்ல முடியாது. கேட்ச்சை விடாம பிடிக்கணுனா இதை செய்ஞ்சே ஆகனும் – அறிவுரை கொடுத்த ரெய்னா

Raina
- Advertisement -

நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் தடுமாற்றமான துவக்கத்தை சந்தித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதால் புதிய கேப்டனாக ஜடேஜா அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் சென்னை அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 8 போட்டிகளின் முடிவில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்த நிலையில் ஜடேஜா கேப்டன்சி பொறுப்பு தனது ஆட்டத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறி மீண்டும் கேப்டன் பதவியை தோனியிடம் வழங்கினார்.

CSK vs SRH

- Advertisement -

அதன் காரணமாக மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அற்புதமாக சென்னை அணியை வழிநடத்தி 3-வது வெற்றியை பெற்றுத் தந்தார். தோனியின் இந்த கேப்டன்சி வருகை ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தாலும் சென்னை அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக கேட்ச்களை தவற விட்டு வருவது மிக வருத்தத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது.

ஏனெனில் வழக்கமாகவே பீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் அணியே எப்போதும் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகம் வைத்திருக்கும். ஆனால் இந்த தொடர் முழுவதுமே சிஎஸ்கே அணி வீரர்கள் கைக்கு வரும் எளிதான கேட்ச்களை கூட தவற விட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணியாக சென்னை அணி தான் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடரில் மட்டும் 19 கேட்ச்களை சென்னை அணியின் வீரர்கள் தவற விட்டுள்ளனர்.

Jadeja

குறிப்பாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட மூன்று எளிய கேட்ச்களை சென்னை அணி வீரர்கள் தவறிவிட்டனர். இதன் காரணமாக பெரிய வெற்றியை பெறவேண்டிய சென்னை அணி இறுதியில் 13 ரன்கள் என்ற குறுகிய இடைவெளியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் தொடர்ச்சியாக கேட்ச்களை தவற விட்டு வருவதால் அவர்களுக்கு சில அறிவுரைகளை முன்னாள் சென்னை வீரரான ரெய்னா வழங்கியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் விளையாடிய போது கூட சென்னை அணியில் இதுபோன்று சில சுலபமான கேட்ச்களை வீரர்கள் தவிர விட்டுள்ளனர். அதனால் யாரையும் இந்த இடத்தில் தவறு சொல்ல கூடாது. அதே போன்று பயிற்சியாளர் மற்றும் நிர்வாகத்தையும் இந்த விஷயத்தில் எதிர்பார்க்கக்கூடாது. நான் சொல்வதெல்லாம் ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் அதாவது :

இதையும் படிங்க : பரபரப்பான கட்டத்தில் பொறுமையை இழந்து கத்திய தல தோனி – அப்படி என்ன நடந்தது தெரியுமா?

வீரர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 200 முறையாவது கேட்சை பிடித்து பயிற்சி செய்ய வேண்டும். நமக்கு முழு தைரியம் வரும் வரை இந்த பயிற்சியினை எடுத்தால் மட்டுமே களத்தில் நாம் விளையாடும் போது கேட்ச் பிடிக்க தைரியம் இருக்கும். இப்படி தொடர்ச்சியாக கேட்ச்சிங் பயிற்சி செய்தால் இதுபோன்ற தவறுகளை தடுக்கலாம் என்று ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement