பரபரப்பான கட்டத்தில் பொறுமையை இழந்து கத்திய தல தோனி – அப்படி என்ன நடந்தது தெரியுமா?

Dhoni
- Advertisement -

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 46-வது லீக் போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே இந்த தொடரில் முதல் 8 போட்டிகளில் ஜடேஜா தலைமையில் விளையாடிய சென்னை அணியானது இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்த நிலையில் நேற்று கேப்டன் மாற்றத்திற்குப் பிறகு முதல் போட்டியில் விளையாடிய சென்னை அணி அபாரமாக விளையாடி சன் ரைசர்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

CSK vs SRH

- Advertisement -

இந்த போட்டியில் எப்போதுமே அமைதியாக இருந்து அணியை வழிநடத்தும் கேப்டன் கூல் என்று பெயரெடுத்த தோனியே தனது சுய தன்மையை மீறி ஆவேசமாக கத்தியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி போட்டியின் கடைசி ஓவரில் சன் ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை வீச முகேஷ் சவுத்ரி வந்தார். சாதாரணமாக பந்து வீசினாலே இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில் நிக்கோலஸ் பூரானுக்கு எதிராக லெக் சைடில் ஒரு பந்தினை முகேஷ் வீசினார்.

Mukesh

அந்த பந்து வொயிடாக செல்லவே அதனால் ஆவேசமடைந்த தோனி பீல்டர்களை நான் ஆப் சைடில் நிறுத்தி வைத்திருக்கிறேன். நீ எந்த திசையில் வீசுகிறாய் என்பது போல கத்தினார். அவரது இந்த செயலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் பின்பு போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய டோனி கூறுகையில் :

- Advertisement -

நான் எப்போதும் பந்துவீச்சாளர்களிடம் கூறுவது ஒரு விடயம்தான். ஒரு ஓவரில் 4 சிக்சர்களை விட்டுக் கொடுத்தால் கூட நீங்கள் சேமிக்கும் கடைசி 2 பந்துகள் அணியை காப்பாற்றும். அதுவும் இதுபோன்ற அதிக இலக்கினை சேசிங் செய்து விளையாடும் போது அந்த இரண்டு பந்துகள் தான் ஆட்டத்தில் வெற்றி பெற உதவும் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஒன்டே, டெஸ்ட் இன்னிங்ஸ் – நட்சத்திர வீரரின் ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி

இந்நிலையில் போட்டி முடிந்து தான் வீசிய கடைசி ஓவர் குறித்து பேசிய முகேஷ் சவுதிரி கூறுகையில் : அந்த கடைசி ஓவரில் நோ பால் மட்டும் வீச வேண்டாம் என தோனி தன்னிடம் கூறியதாக முகேஷ் சவுத்ரி தெரிவித்தார்.

Advertisement