எதிர்பாரா திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் கேன் வில்லியம்சன் தலைமையான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் வாரத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது. இருப்பினும் அதன்பின் கொதித்தெழுந்த அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களுக்குள் நுழைந்தது. அந்த நிலையில் மே 1-ஆம் தேதி நடைபெற்ற தனது 9-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை எதிர்கொண்ட அந்த அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. அதனால் 5 தொடர் வெற்றிகளுக்கு பின் 3-வது தோல்வியை பதிவு செய்தாலும் புள்ளி பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
புனே நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்த ஹைதராபாத்தை ஓபனிங் வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே முதல் ஓவரிலிருந்தே ஜோடி போட்டு அதிரடி சரவெடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டனர். இருவருமே அரைசதம் கடந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பின்பும் அவுட்டாகாமல் அடம் பிடித்து ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்த நிலையில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் 99 (57) ரன்கள் எடுத்த ருதுராஜ் துரதிஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
ஹைதெராபாத் தோல்வி:
இருப்பினும் 182 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்காக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த ஜோடி என்ற இரட்டை சாதனைகளை படைத்து மிரட்டியது. அவர் அவுட்டானதும் மறுபுறம் தொடர்ந்து மிரட்டிய டேவோன் கான்வே 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 85* (55) ரன்கள் குவித்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் 202/2 ரன்களை சென்னை எடுத்தது.
அதை தொடர்ந்து 203 என்ற பெரிய இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அந்த நிலையில் 39 (24) ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க அடுத்து வந்த ராகுல் திரிப்பாதி கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த ஒருசில ஓவர்களில் ஐடன் மார்க்ரம் 17 (10) ரன்களில் அவுட்டானபோது கேன் வில்லியம்சனும் 47 (37) ரன்களில் அவுட்டாகி பின்னடைவைச் கொடுத்தார்.
ஒன்டே இன்னிங்ஸ்:
அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஷஹாங்க் சிங் 15 (14) வாஷிங்டன் சுந்தர் 2 (2) போன்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இறுதியில் நிக்கோலஸ் பூரன் தனி ஒருவனை போல அதிரடியாக 3 பவுண்டரி 6 சிக்சருடன் 64* (33) ரன்கள் எடுத்தாலும் 20 ஓவர்களில் 189/6 ரன்களை மட்டுமே எடுத்த ஐதராபாத் போராடி தோற்றது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகள் எடுத்தார். இந்நிலையில் இந்த போட்டியில் ஹைதராபாத் தோல்விக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் மெதுவாக விளையாடியதே காரணம் என்று நிறைய ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
ஏனெனில் 203 என்ற நிலையில் ஓவருக்கு 10 ரன்கள் வேண்டுமென்ற சூழ்நிலையில் 37 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 பவுண்டரி 2 சிக்சர் அடித்தாலும் 47 ரன்களை 127.03 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் மட்டுமே எடுத்தார். ஆனால் இதுபோன்ற ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும் என்று ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக:
சரி இந்த ஒரு போட்டியில் தான் அப்படி என்று பார்த்தால் இந்தத் தொடர் முழுவதுமே இதேபோல் ஒன்று ஒன்டே இன்னிங்ஸ் அல்லது டெஸ்ட் இன்னிங்ஸ் போல மெதுவாக அல்லது ரொம்பவும் மெதுவாக கேன் வில்லியம்சன் டேட்டிங் செய்வதாக நிறைய ரசிகர்கள் அலுத்துக்கொள்கின்றனர். ஏனெனில் இந்த வருடம் இதுவரை 2 (7), 16 (16), 32 (40), 57 (46), 17 (16), 3 (9), 16 (17), 5 (8), 47 (37) என எந்த ஒரு போட்டியிலும் டி20 இன்னிங்ஸ் போல அதிரடியாக ஆடாத அவர் சுமாரான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் மட்டுமே விளையாடி வருகிறார். குறிப்பாக நேற்றைய போட்டியை போல பெரிய ரன்களை துரத்தும் போது அவரின் ஸ்ட்ரைக் ரேட் ஒன்டே இன்னிங்ஸ் போல மோசமாக உள்ளது.
Where does Kane Williamson fit in a T20 team?
Opening – ass against new ball and can’t utilise power-play
Number 3,4 – can’t hit boundaries against spin, can’t accelerate at the death
Number – 5,6 – he needs 20-25 balls to settle so a big no
What is he actually good at?
— #WilliamsonACL 🛐🤲 (@jathinidengutam) May 1, 2022
From the depth of my heart i want Kane Williamson to give up T20 cricket. There's like more than 50 KW waiting in the Sayed Mustaque Ali trophy India. He is too bad in this format.
— KH SAKIB (@Crickettalkss) May 1, 2022
Kane Williamson Captaincy is so overrated.
There are people who get horny over his bowling changes and then go silent when he sends Markram vs spin and pooran vs pace.
Imagine misusing one of the best six hitters in IPL like this— Abdullah Hammad (@abdullahhammad4) May 1, 2022
I blame Kane Williamson for this defeat
— #WilliamsonACL 🛐🤲 (@jathinidengutam) May 1, 2022
47(37) 7.62 RPO in a chase of 203 (10.15)
Not even once in a single match this IPL has Kane Williamson scored his runs at the reqd rate at the start of the innings, or at a rate higher than his team score. I can understand that he wants to anchor, but he's either getting out in
— Gurkirat Singh Gill (@gurkiratsgill) May 1, 2022
Williamson faced 12 of his 36 balls in this innings inside the powerplay, and yet managed only 47 chasing 203.
— KASHISH (@crickashish217) May 1, 2022
Williamson got Away with his bowlers bowling well and players like Tripathi , Markram scoring runs. Today the whole responsibility on the defeat should be on his head #IPL2022
— Cricket Tamizhan (@CricketTamizhan) May 1, 2022
Kane Williamson in PP in #IPL2022
97 runs 😁
116 balls 😳
5 outs 😍
83 SR 😈better than priyam garg???
— jä. (@jattuu12) May 1, 2022
Kane Williamson Playing with 120 strike rate even after 12 overs on this pitch. Liability for SRH.
— LSG 🏏 (@PeterParker7194) May 1, 2022
Again it's kane Williamson costed SRH another match. Absolutely ridiculous batting when chasing 10+ rpo. Unfit to play T20 Cricket #SRHvCSK
— Señor K (@kirr_dev) May 1, 2022
எனவே டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் அவரை பாராட்டுவதற்காக அதே ஆட்டத்தை டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவது எந்த வகையிலும் அணியின் வெற்றிக்கு பயனளிக்காது என்று நட்சத்திர வீரராக கருதப்படும் கேன் வில்லியம்சன் மீது ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.