விராட் கோலிக்கு என்ன ஆனது? அவர் ஏன் விளையாடவில்லை – டாஸின் போது விளக்கத்தை கூறிய கே.எல் ராகுல்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் டாஸ் போட மைதானத்திற்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் கேப்டன் விராட் கோலி களத்திற்கு வராமல் ராகுல் களத்திற்கு வந்ததால் என்ன ஆனது? என்று தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு டாசிற்கு பிறகுதான் விராட் கோலி அணியில் இல்லை என்பது புரிந்தது.

kohli

- Advertisement -

மேலும் இந்திய அணியின் கேப்டனாக இந்த போட்டியில் ராகுல் முதன்முறையாக களமிறங்கினார். டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்றும் அறிவித்தார். அதன்படி டாசுக்கு பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றம் குறித்தும், விராட்கோலி ஏன் விளையாடவில்லை என்பது குறித்தும் ராகுல் தனது தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி எதிர்பாராவிதமாக முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக இந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது. பிசியோதெரபிஸ்ட் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். நிச்சயம் அவர் அடுத்த போட்டிகள் தயாராகிவிடுவார். ஒவ்வொரு இந்திய வீரரும் இந்திய அணிக்காக கேப்டன்சி செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

kohli 1

இந்த சவாலை எதிர்கொண்டு நான் விளையாட தயாராக இருக்கிறேன். இந்த மைதானத்தில் ஏற்கனவே இந்திய அணி சில வெற்றிகளை பெற்று உள்ளதால் நிச்சயம் அதை தொடர விரும்புகிறேன் என்று ராகுல் கூறினார். இந்த போட்டியில் காயம் காரணமாக விராத் கோலி விளையாடவில்லை என்றாலும் நிச்சயம் கேப்டவுனில் 13-ஆம் தேதி நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் : இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு. விராட் கோலி இல்லை – புதிய கேப்டன் யார்?

அதோடு இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி தற்போது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவற விட்டதால் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியை அவர் இந்திய மண்ணில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement