இரண்டாவது டெஸ்ட் : இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு. விராட் கோலி இல்லை – புதிய கேப்டன் யார்?

Kohli
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று ஜோகனஸ்பர்க் மைதானத்தில் துவங்கியது.

INDvsRSA

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் போட வராதது அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதன் காரணமாக இந்த போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை என்பது உறுதியானதால் அவரது ரசிகர்களிடையே இது பெரும் வருத்தமான ஒரு செய்தியாக மாறியது.

- Advertisement -

அவருக்கு பதிலாக கே.எல் ராகுல் டாஸ் போட வந்து டாஸில் வெற்றிபெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. அண்மையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் காயமடைந்தார்.

Rahul

இதன் காரணமாக டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பதவியை ராகுல் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது விராட் கோலி இரண்டாவது போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலையில் ராகுல் டெஸ்ட் கேப்டனாக மாறியுள்ளார். நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ராகுல் அசத்தலான சதம் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 18 வருட கிரிக்கெட் பயணத்திற்கு குட்பை சொல்லி ஓய்வை அறிவித்த பாக் வீரர் – ரசிகர்கள் வாழ்த்து

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement