18 வருட கிரிக்கெட் பயணத்திற்கு குட்பை சொல்லி ஓய்வை அறிவித்த பாக் வீரர் – ரசிகர்கள் வாழ்த்து

Hafeez
Advertisement

பாகிஸ்தான் அணியை சேர்ந்த சீனியர் ஆல்ரவுண்டரான முகமது ஹபீஸ் கடந்த 2003-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி தற்போது தற்போது வரை 55 டெஸ்ட் போட்டிகள், 218 ஒருநாள் போட்டிகள் மற்றும் 119 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். பாகிஸ்தான் அணிக்காக மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் 12780 ரன்களும், 253 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Hafeez 1

தற்போது 41 வயதை எட்டியுள்ள முகமது ஹபீஸ் தனது 18 வருட கிரிக்கெட் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தான் ஓய்வு பெறும் செய்தியை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில் :

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் நான் போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு விளையாடி திருப்தி அடைந்துள்ளேன். பாகிஸ்தான் அணிக்காக விளையாடி அதில் மிகவும் பெருமை. என்னுடன் பயணித்த அனைத்து வீரர்கள், கேப்டன்கள், நிர்வாக அதிகாரிகள் என அனைவருக்கும் நன்றி. இந்த கிரிக்கெட் பயணத்தில் நான் எனது நாட்டிற்காக இத்தனை நாட்கள் விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது.

Hafeez

அனைவரது பயணத்திற்கும் ஒரு முடிவு உண்டு. அந்த வகையில் என்னுடைய கிரிக்கெட் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளேன் என்று கூறி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உலகெங்கிலும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வீடியோ : ரொம்பதான் ஆட்டியூட் காட்டுறாரு. ரசிகர்களிடம் இப்படியா நடந்துக்குவீங்க? – பாண்டியாவின் செயல்

41 வயதான முகமது ஹபீஸ் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வரும் கரீபியன் லீக், இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரீமியர் லீக், பிக்பேஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்ற லீக் போட்டிகளில் அவர் கலந்துகொண்டு விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement