வீடியோ : ரொம்பதான் ஆட்டியூட் காட்டுறாரு. ரசிகர்களிடம் இப்படியா நடந்துக்குவீங்க? – பாண்டியாவின் செயல்

Pandya
Advertisement

ஹார்டிக் பாண்டியாவின் கிரிக்கெட் பயணம் முழுவதுமாகவே ஒரு திடீர் திருப்பம் நிறைந்ததாக இருந்து வருகிறது. ஏனெனில் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான பாண்டியா வெகுவிரைவிலேயே முன்னணி வீரராக வளர்ந்து நின்றார். அது மட்டுமின்றி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக கபில் தேவுக்குப் பிறகு சிறந்த வீரர் இவர்தான் என்று பாராட்டப்படும் அளவிற்கு அவருடைய ஆட்டம் சிறப்பாக அமைந்தது. அதன் பிறகு சிறிது காலத்திலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாண்டியா பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை பகிர்ந்து அதன் காரணமாக சில போட்டிகளில் இந்திய அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

Pandya-2

பின்பு மீண்டும் இந்திய நிர்வாகம் அவரை மன்னித்து அணியில் சேர்க்கவே அதன்பிறகு அணியில் விளையாடிய அவர் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி திடீர் திருமணம், பொதுவெளியில் ஆட்டிட்யூட் காட்டுவது, விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்குவது என அவர் எதை தொட்டாலும் அந்த விடயங்கள் சர்ச்சையாக மாறி வந்தன.

- Advertisement -

அதன்பின்பு டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வான அவர் பந்து வீசாமல் விளையாடியது அனைவரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தற்போது தானாக முன்வந்து தான் பந்துவீசும் அளவிற்கு உடற்தகுதி பெறும்வரை தன்னை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு தற்போது அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் பாண்டியா பொதுவெளியில் ரசிகர்கள் மத்தியில் ஆட்டிட்யூட் காட்டிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி தற்போது காயத்திற்கு சிகிச்சை மற்றும் பயிற்சி மேற்கொண்டு வரும் ஹார்டிக் பாண்டியா ரசிகர்கள் மத்தியில் நின்று சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது திடீரென ஒரு ரசிகர் பாண்டியாவின் தோள் மீது கை வைத்தார், அதை கவனித்த பாண்டியா உடனடியாக அந்த ரசிகரின் கையை தட்டி விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பாண்டியா இதேபோன்று ஆட்டிட்யூட் காட்டுவது தவறான ஒரு விடயம் என்றும் ரசிகர்களுக்கு உண்டான மரியாதையை அவர் கொடுத்திருக்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : INDvsRSA : ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் – அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

ஆனால் பாண்டியா மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்த வேளையில் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும், தனி மனித இடைவெளி இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் செய்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement