INDvsRSA : ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் – அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு

INDvsRSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜனவரி 19, 21, 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் இந்த ஒருநாள் தொடரில் பங்கேற்கும் தங்களில் அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள அந்த அணியின் கேப்டனாக பவுமாவும், துணை கேப்டனாக கேஷவ் மஹாராஜ் ஆகியோரும் தொடர்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவின்டன் டிகாக் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.

- Advertisement -

மேலும் டேவிட் மில்லர், மார்க்கம், லுங்கி எங்கிடி, ரபாடா, ஷம்சி, வேண்டர்டுசென் போன்ற பல நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அறிமுக வீரராக மார்க்கோ யான்சன் இடம்பெற்றிருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இவருக்கு தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆன்ரிச் நோர்க்கியா வெளியேறியுள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்த அவர் தற்போது ஒருநாள் தொடரில் இருந்தும் வெளியேறியது அந்த அணிக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணி வீரர்களின் பட்டியல் இதோ :

டெம்பா பவுமா (கேப்டன்), கேஷவ் மஹராஜ் (துணை கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஜுபைர் ஹம்ஸா, மார்கோ ஜான்சென், ஜனெமன் மலான், சிசாண்டா மகளா, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, வைன் பார்னெல், ஃபெலுக்வாயோ, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ஷாம்ஸி, வாண்டெர் டசன், கைல் வெரெய்ன்.

Advertisement