முடிவு கிடைக்கணும்னு தான் பிட்சை அப்படி ரெடி ரெடி பண்றாங்க. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த – ராகுல் டிராவிட்

Rahul-Dravid
Advertisement

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் நடத்தப்பட்டது. இப்படி சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் போட்டிகள் நடத்தப்பட்டது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

IND vs AUS

ஏனெனில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளுமே மூன்று நாட்களில் முடிவுக்கு வந்தது. அதேபோன்று சுழற்பந்து வீச்சினை எதிர்த்து சமாளிக்க முடியாமல் திணறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வேண்டுமென்றே இது போன்ற ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் இந்தூர் ஆடுகளம் மோசமானது என ஐசிசி மூன்று தகுதி இழப்பு புள்ளிகளையும் கொடுத்திருந்தது. இப்படி தொடர்ச்சியாக இந்திய ஆடுகளங்கள் குறித்த விமர்சனங்கள் அனைவரது மத்தியிலும் இருந்து வருகின்றன. இந்நிலையில் மூன்றாவது போட்டி நடைபெற்ற இந்தூர் ஆடுகளம் மோசமானது என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பதிலளித்துள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் :

IND vs AUS Indore Pitch

நான் போட்டி நடக்கும் பிட்ச் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. போட்டி நடுவருக்கு தனது கருத்தை பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு. அந்த வகையில் அவரது கருத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதை நான் ஏற்றுக் கொள்கிறேனா? இல்லையா? என்பது முக்கியமில்லை. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

எனவே இதுபோன்ற முக்கியமான தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் முடிவு கிடைக்கவேண்டியது அவசியமான ஒன்று. அதற்காகத்தான் முடிவு கிடைக்கக்கூடிய ஆடுகளங்களை விளையாட வேண்டியுள்ளது. பெரும்பாலான நாடுகளிலும் இதைத்தான் செய்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது சவாலாக உள்ளதை பார்க்க முடிகிறது. நாங்களும் வெளிநாடுகளில் சவாலான மைதானங்களில் விளையாடி இருக்கிறோம்.

இதையும் படிங்க : அவர மாதிரி கேப்டன் கிடைக்க நாங்க கொடுத்து வெச்சுருக்கணும் – கெளதம் கம்பீர் மகிழ்ச்சி பேட்டி

2022-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நாங்கள் விளையாடிய போது அங்கு சுழற்பந்து வீச்சுக்கு துளியும் கைகொடுக்காத ஆடுகளங்களில் நாங்கள் விளையாடினோம். எங்கு விளையாடினாலும் முடிவுகள் கிடைக்கக்கூடிய வகையில் தான் ஆடுகளங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தான் இந்தியாவில் முழுவதும் முடிவுகள் கிடைக்கக்கூடிய ஆடுகளத்தை தயார் செய்து விளையாடுகிறோம் என ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement