அவர மாதிரி கேப்டன் கிடைக்க நாங்க கொடுத்து வெச்சுருக்கணும் – கெளதம் கம்பீர் மகிழ்ச்சி பேட்டி

Gambhir
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்ல களமிறங்கும் 10 அணிகளுக்கு மத்தியில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி விளையாட உள்ளது. கடந்த வருடம் 7090 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு உருவாக்கப்பட்ட அந்த அணிக்கு கர்நாடகாவை சேர்ந்த நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 17 கோடிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக சமீப காலங்களாகவே தடவலாக செயல்பட்டு வரும் அவர் 2022 சீசனில் 616 ரன்களை குவித்தும் அதை 135க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தது முதல் சீசனிலேயே லக்னோ கோப்பையை வெல்லும் அளவுக்கு உபயோகப்படவில்லை.

- Advertisement -

அதை தொடர்ந்து காயமடைந்து குணமடைந்து வந்த அவர் பார்மை இழந்து அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் முன்பை விட மோசமாக தடவலாக செயல்பட்டது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தடுமாறி வரும் அவர் கடந்த ஒரு வருடமாகவே நிறைய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

கொடுத்து வெச்சுருக்கணும்:
அந்த விமர்சனங்களை தாங்க முடியாத பிசிசிஐ வேறு வழியின்றி அவருடைய துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்த நிலையில் இந்திய அணி நிர்வாகம் அவரை விளையாடும் 11 பேர் அணியிலிருந்து கழற்றி விட துவங்கியுள்ளது. அதனால் பெரிய பின்னடைவை சந்தித்துள்ள கேஎல் ராகுல் மீண்டும் இழந்த இடத்தை பெறுவதற்கு அடுத்து வரும் போட்டிகளில் குறிப்பாக 2023 ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. இருப்பினும் ராகுல் போன்ற கிளாஸ் நிறைந்த வீரர் தங்களுடைய அணிக்கு கேப்டனாக கிடைத்துள்ளது அதிர்ஷ்டம் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

KL Rahul LSG Quinton De Kock vs KKR

இது பற்றி லக்னோ அணியின் புதிய ஜெர்சி வெளியிட்டு விழாவில் அவர் பேசியது பின்வருமாறு. “மிகவும் நிலையாக மற்றும் சமமாக கேப்டன்ஷிப் செய்யும் தலையைக் கொண்ட கேஎல் ராகுல் போன்றவர் எங்களுடன் இருப்பது எங்களுடைய அதிர்ஷ்டமாகும். அவருடைய அந்த பண்பு எனக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் என்னிடம் அது இல்லை. கடினமான அந்த பண்பைப் பின்பற்ற முயற்சித்தும் எனக்கு வேலை செய்யவில்லை. மேலும் லக்னோ போன்ற ஒரு அணிக்கு கேஎல் ராகுல் போன்றவர் தலைமையில் இருப்பது அவசியமாகும். புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தியுள்ள இந்த நாளில் வெற்றிக்காக முன்னோக்கி நாங்கள் நடைக்க உள்ளோம். இது எங்களுக்கு பெரிய நேர்மறையை ஏற்படுத்தியுள்ளது”

- Advertisement -

“பொதுவாக கேப்டன் தான் அந்த அணியின் வெற்றிக் கொடியை பிடிப்பவர். இது கேப்டனுடைய அணியாகும். எனவே உடைமாற்றும் அறையில் இருக்கும் அனைவரும் அவருக்கு ஆதரவு கொடுப்பது அவசியமாகும். மேலும் கேப்டனை விட பயிற்சியாளர் குழுவில் இருக்கும் யாருக்கும் அதிகப்படியான அழுத்தம் இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கேப்டனின் பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கிறது என்பது தான் அணியின் செயல்பாடுகளை நிர்ணயிக்கும்” என்று கூறினார்.

Gambhir

அதாவது என்ன ஆனாலும் விமர்சனங்கள் இருந்தாலும் அதற்காக கவலைப்படாமல் ஒரே மாதிரியாக கூலாக இருக்கும் குணத்தை கொண்ட கேஎல் ராகுல் தங்களது அணியின் கேப்டனாக கிடைப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க:10 நாள் முன்னாடி வந்து அப்டி பிட்ச் அமைக்க சொன்னாங்க, பிசிசிஐயை நம்பி மோசம் போயிட்டோம் – இந்தூர் மைதான நிர்வாகம் புலம்பல்

குறிப்பாக அந்த குணத்தை தாம் பின்பற்ற நினைத்தும் தமக்கு வரவில்லை என்று தெரிவிக்கும் அவர் தற்போது இருக்கும் விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து லக்னோ அணியில் ராகுலுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இதை அடுத்து தங்களுடைய முதல் போட்டியில் ஏப்ரல் 1ஆம் தேதி டெல்லி அணியை லக்னோ எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement