10 நாள் முன்னாடி வந்து அப்டி பிட்ச் அமைக்க சொன்னாங்க, பிசிசிஐயை நம்பி மோசம் போயிட்டோம் – இந்தூர் மைதான நிர்வாகம் புலம்பல்

Pitch India
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 3வது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா கடைசி போட்டியில் வென்றால் தான் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஆரம்பத்திலிருந்தே இத்தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்படுவதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்டி வந்த நிலையில் நாக்பூர் மற்றும் டெல்லியை விட 3வது போட்டி நடைபெற்ற இந்தூரில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி அளவுக்கு பிட்ச் தாறுமாறாக சுழன்றது.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

அதில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட எந்த தரமான பேட்ஸ்மேன்களாலும் தாக்கு பிடிக்க முடியாத இந்தியாவை 109, 163 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா சிறப்பான வெற்றி பெற்றது. ஆனால் முதல் நாளிலேயே சுழன்ற இந்த பிட்ச்சில் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா உள்ளிட்ட யாராலும் பேட்டிங் செய்ய முடியாது என்று ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் இந்திய வீரர்களே கடுமையாக விமர்சித்தனர். மேலும் என்ன தான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் அதற்காக முதல் நாளிலேயே இப்படி எதிர்பாராத அளவுக்கு சுழல்வது ஏமாற்றத்தை கொடுப்பதாக பெரும்பாலான இந்திய ரசிகர்களும் தெரிவித்து வருகிறார்கள்.

பரிதாப இந்தூர்:
இவை அனைத்தையும் விட இந்தூர் பிட்ச் மோசமாக இருந்ததாக ரேட்டிங் வழங்கிய ஐசிசி அதற்கு 3 கருப்பு புள்ளிகளை தண்டனையாக கொடுத்தது. அதனால் அடுத்த 5 வருடங்களுக்குள் 5 கருப்பு புள்ளிகளை தொடும் போது 12 மாதங்கள் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான தடை இந்தூர் மைதானத்திற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் நடைபெறுவதாக இருந்த அந்த 3வது போட்டி அங்கு நிலவும் குளிர்காலத்தால் தேவையான புற்களை வளர்க்க முடியாது என்ற நிர்பந்தத்தால் இந்தூருக்கு பிசிசிஐ மாற்றியது.

Indore-Pitch

ஆனால் போட்டி தூங்குவதற்கு 10 நாட்கள் முன்பாக இந்திய அணியின் சார்பில் பிசிசிஐ மைதான பராமரிப்பாளர்கள் கமிட்டியிலிருந்து 2 பேர் வந்து சுழலும் வகையில் பிட்ச் அமைக்குமாறு கேட்டுக் கொண்டதாக இந்தூர் மைதான நிர்வாகம் பின்னணியை அம்பலப்படுத்தியுள்ளது. அதாவது பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தின் பேச்சை கேட்டு எப்போதுமே பேட்டிங்க்கு சாதகமாக இருக்கக்கூடிய தங்களது பிட்ச்சை மாற்றியதே ஐசிசி மோசமான ரேட்டிங் வழங்குவதற்கு காரணமாக அமைந்ததாக இந்தூர் மைதானம் நிர்வாகம் வேதனையை வெளிப்படுத்தியுள்ளது.

- Advertisement -

இது பற்றி அந்த மைதானத்தை நிர்வாகிக்கும் மத்திய பிரதேச கிரிக்கெட் வாரிய அசோசியேஷன் தலைவர் அபிலாஷ் கான்டேக்கர் கொடுத்த சமீபத்திய பேட்டியில் பேசியது பின்ருமாறு. “பிசிசிஐ சார்பில் 2 மைதான பராமரிப்பாளர்கள் போட்டி துவங்குவதற்கு 8 – 10 நாட்கள் முன்பாக வந்தார்கள். அவர்களது மேற்பார்வையில் அவர்களது ஆலோசனையின் படி தான் பிட்ச் அமைக்கப்பட்டது. மாறாக மத்திய பிரதேச வாரியம் இது போன்ற பிட்ச் அமைப்பதற்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. குறிப்பாக இதர மாநில வாரியங்களைப் போலவே சர்வதேச போட்டி நடைபெறும் மைதானத்தின் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்பதில் மத்திய பிரதேச வாரியம் தலையிடவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்”

Pitch

“பிசிசிஐ மைதான பராமரிப்பாளர்கள் தான் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி இந்த பிட்ச்சை அமைத்தனர். அதனால் டெல்லி மற்றும் நாக்பூரை போலவே இங்கேயும் 3 நாட்களில் போட்டி முடிந்தது. அதன் காரணமாக இங்கே அமைக்கப்பட்ட பிட்ச் பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் போட்டியின் முடிவில் இரு அணியின் கேப்டன்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடமாட்டாரு – கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தகவல்

அப்படி தங்களது தலையிட்டால் தண்டனை பெற்றுள்ள இந்தூர் மைதானத்துக்கு ஐசிசி வழங்கிய ரேட்டிங்கை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement