IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடமாட்டாரு – கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தகவல்

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனெனில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்றாவது போட்டியில் தோல்வியை சந்தித்து ஒரு சறுக்களை சந்தித்துள்ளது. அதனை தொடர்ந்து 4 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை மறுதினம் மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது.

Pujara

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பினை உறுதி செய்யும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியானது நான்காவது போட்டியிலும் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தனது தாயின் உடல் நிலையை கருதி நாடு திரும்பினார்.

Pat-Cummins

மேலும் மூன்றாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்றும் நான்காவது போட்டிக்கு முன்னதாக அவர் அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா பயணித்திருந்த பேட் கம்மின்ஸ் இன்னும் அவர் தாயுடனே தங்கி இருப்பதால் இந்தியா திரும்பாமல் இருக்கிறார். நாளை மறுதினம் போட்டி இருக்கும் வேளையில் இன்னும் பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்பாததால் நிச்சயம் நான்காவது போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs AUS : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்ல – என்ன செய்ய வேண்டும்?

அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணியின் கேப்டன் பொறுப்பை கவனித்துக் கொள்வார் என்று தெரிகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் இன்னும் பேட் கம்மின்ஸ் தனது தாயுடனே சிட்னியில் தங்கி இருப்பதாக தங்களது இணையதளத்தில் தெரிவித்துள்ளதால் கட்டாயம் நான்காவது போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement