IND vs AUS : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி செல்ல – என்ன செய்ய வேண்டும்?

ind
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக இந்த தொடரானது தற்போது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் உள்ளது.

IND vs AUS

- Advertisement -

இதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி நாளை மறுதினம் அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு வாழ்வா, சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஏற்கனவே மூன்றாவது போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முதல் அணியாக தகுதி பெற்றுவிட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நீடிக்கின்றன. இதில் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு இரண்டாவது அணியாக தொகுதி பெற்றுவிடும்.

அப்படி இல்லாமல் ஒருவேளை கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலோ அல்லது டிரா ஆனாலோ இந்திய அணிக்கு பிரச்சனை இருக்கும். ஏனெனில் இந்திய அணி கடைசி போட்டியில் வெற்றி பெறாவிட்டால் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முடிவினை இந்திய அணி எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

- Advertisement -

அப்படி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நியூசிலாந்து அணியை இலங்கை அணி அந்த தொடரில் இரண்டு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வீழ்த்தி விட்டால் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பினை இழந்து விடும். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இலங்கை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும்.

இதையும் படிங்க : அது எப்படி நீங்க அப்படி சொல்லலாம். ஐ.சி.சி யின் தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல்

ஒருவேளை நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை அவர்கள் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கிலோ அல்லது ஒன்றுக்கொன்று (1-1) என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றாலோ இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டுமெனில் கடைசி போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement