அது எப்படி நீங்க அப்படி சொல்லலாம். ஐ.சி.சி யின் தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பலமாக தங்களது ஆதிக்கத்தை இந்த தொடரில் வெளிப்படுத்தியிருந்தது.

IND vs AUS Indore Pitch

- Advertisement -

அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 1-ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்கும் முடியாமல் மூன்றாவது நாளில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை பெற்றது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி தற்போது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.

எதிர்வரும் நான்காவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்கிற வேளையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோற்க மோசமான ஆடுகளம் தான் காரணம் என்று பலரும் விமர்சித்து இருந்தனர்.

Pujara

அதோடு இந்த இந்தூர் மைதானம் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்து அதிக அளவில் சுழன்றதால் இந்த மைதான ஆடுகளம் மோசமான ஒன்று என ஐசிசி-யிடம் நடுவர் க்றிஸ் பிராடு தனது கோரிக்கையை முன் வைத்தார். அவரது அந்த கோரிக்கையை ஏற்ற ஐசிசி-யும் இந்தூர் ஆடுகளத்திற்கு மூன்று அபராத புள்ளிகளை வழங்கியது.

- Advertisement -

இந்நிலையில் இந்து ஆடுகளம் மோசம் என்று ஐசிசி அளித்த தீர்ப்பை எதிர்த்து தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் : நாங்கள் இந்தூர் மைதானத்தின் ஆடுகளத்தின் நிலைமையை ஆய்வு செய்து முடிவு எடுப்போம். ஐசிசி விதிமுறைகள் படி மேல்முறையீடு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் வெற்றிக்கு அது முக்கியமல்ல, தடவலாக பேட்டிங் செய்வதற்கான காரணத்தை விளக்கும் கேஎல் ராகுல்

எனவே நாங்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்று அவர் தெரிவித்திருந்தார். ஒரு மைதானம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட அபராத புள்ளிகளை பெற்றால் அங்கு 12 மாதங்களுக்கு எந்த ஒரு சர்வதேச போட்டிகளையும் நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement