இந்திய அணிக்கு மட்டுமல்ல எல்லா டீமுக்குமே இந்த பிரச்சனை இருக்கு – ராகுல் டிராவிட் கருத்து

Dravid
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது கடந்த 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. அதற்கு அடுத்து 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டில் இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்தையே சந்தித்து வந்தது. இதற்கு முக்கிய காரணமாக பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் இல்லாததும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது.

ஏனெனில் கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது சச்சின், சேவாக், ரெய்னா, யுவராஜ் என ஏகப்பட்ட பேட்ச்மேன்கள் பார்ட் டைம் பந்துவீச்சாளர்களாக இருந்தனர். அதோடு அவர்களை வைத்து தோனி 10 முதல் 15 ஓவர்களை வீசி விடுவதாலேயே மற்ற பந்து வீச்சாளர்களின் அழுத்தம் குறைந்ததாக பேசப்பட்டது.

- Advertisement -

ஆனால் தற்போதைய இந்திய அணியில் பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. ஏனெனில் முதன்மையான பந்துவீச்சாளர்களை தவிர்த்து பந்து வீசும் பேட்மேன்கள் இல்லாதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே இந்திய அணி தற்போது ஆல்ரவுண்டர்களை பலப்படுத்தி வருகிறது.

ஆனாலும் முன்பை விட தற்போது இந்திய அணியில் பந்து வீசும் பேட்ஸ்மேன்கள் இல்லை என்பது நியாயமான ஒரு விடயம் தான். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவில் : இந்திய அணியினர் பார்ட் டைம் பவுலர்கள் இல்லை என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

தற்போதைய இந்திய அணியில் பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் இல்லாததற்கு காரணம் ஐசிசி-யின் விதிமுறைகளை மாற்றம் கொண்டுவரப்பட்டது தான். ஏனெனில் தற்போதயெல்லாம் 30 யார்டு வளையத்திற்குள் 5 பீல்டர்கள் இருக்க வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பேட்மேன்ன்கள் அதிரடியாக விளையாடுகின்றனர்.

இதையும் படிங்க : இந்தியாவை தாண்டி 2023 உ.கோ மேல பாக், இலங்கை கைய கூட வைக்க முடியாது.. காரணம் இது தான் – முன்னாள் இங்கி வீரர் அதிரடி

அதன் காரணமாக பீல்டர்களை சரியாக பயன்படுத்த முடியாமல் போகிறது. ஆனால் 30 யார்டு வட்டத்திற்குள் நான்கு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட போது ஏகப்பட்ட பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க துவங்கி விட்டார்கள். இதன் காரணமாகவே பார்ட் டைம் பவுலர்களை பயன்படுத்த முடியாமல் போனது. இந்திய அணியை பொருத்தம் மட்டும் அல்லாமல் மற்ற அணிகளிலும் இதே போன்ற குறை இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும் விதிமுறைகளின் அடிப்படையிலேயே இந்த சிக்கலை அனைத்து அணிகளும் சந்தித்து வருவதாக ராகுல் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement