இந்தியாவை தாண்டி 2023 உ.கோ மேல பாக், இலங்கை கைய கூட வைக்க முடியாது.. காரணம் இது தான் – முன்னாள் இங்கி வீரர் அதிரடி

Dominic Cork
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற உலக கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக கருப்படும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது.

இருப்பினும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்ததால் இம்முறையும் கோப்பையை வெல்ல முடியாது என்று இந்திய ரசிகர்களே அணியில் இருக்கும் பல குளறுபடியான அம்சங்களால் நம்பிக்கையற்ற கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை துவம்சம் செய்து 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பின் மீண்டும் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களிடம் பிறந்துள்ளது.

- Advertisement -

நெருங்க முடியாது:
ஏனெனில் அத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷாஹீன் அப்ரிடியை சிறப்பாக எதிர்கொண்டு இடது கை பவுலர்களுக்கு எதிரான தடுமாற்றத்தில் முன்னேறியதை காட்டினார்கள். அதே போல மிடில் ஆர்டரில் இசான் கிசான் – பாண்டியா தாங்கி பிடித்த நிலையில் பும்ரா, ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ளது இந்திய அணிக்கு பெரிய பலமாக மாறியுள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பையை வென்ற பின் இந்தியா முழுமையான அணியாக மாறியுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் டாமினிக் கோர்க் பாராட்டியுள்ளார். அதனால் 2023 உலக கோப்பையில் இந்தியாவை தாண்டி இலங்கை போன்ற ஆசிய அணிகளால் வெற்றி பெறுவது கடினம் என்று தெரிவிக்கும் அவர் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு என கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் இதை ஒரு பொதுவான நபராக இருந்து பார்க்கிறேன். ஏனெனில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிகளை நாங்களும் பார்க்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் பிஎஸ்எல் தொடரில் என்ன நடக்கிறது பாகிஸ்தான் எவ்வளவு வலுவான அணி என்பதும் நமக்குத் தெரியும். அந்த வகையில் ஆசிய கோப்பையில் அனைத்து அணிகளும் நன்றாக விளையாடினாலும் இந்தியா இறுதியில் இலங்கையை 50 ரன்கள் சுருட்டி வெற்றி கண்டது”

இதையும் படிங்க: ராகுல் டிராவிட்டுக்கு அந்த பவர் இல்ல.. இது தெரியாம அவரை விமர்சிக்காதீங்க – இந்திய ரசிகர்களுக்கு மஞ்ரேக்கர் கோரிக்கை

“எனவே இந்தியா தற்போது வலுவான அணியாக இருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் தடுமாறுகிறது. சொல்லப்போனால் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு வாய்ப்பு இல்லை என்றே நீங்கள் சொல்லலாம். இருப்பினும் அவர்களை நீங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால் சூரியகுமார், ஸ்ரேயாஸ் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்ற இந்தியா முழுமையான அணியாக தெரிகிறது. குறிப்பாக ரோஹித், விராட், கில் போன்ற வீரர்களால் இந்தியா வலுவான அணியாக இருக்கிறது. பாகிஸ்தான் வலுவற்ற அணியாக தெரிகிறது” என்று கூறினார்.

Advertisement