WTC Final : சாக்கு சொல்ல விரும்பல. ஆனாலும் தோல்விக்கு இதுதான் காரணம் – ராகுல் டிராவிட் ஓபன்டாக்

Rahul-Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியானது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணியானது 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதேவேளையில் மீண்டும் ஒருமுறை ஐசிசி தொடரை தவறவிட்டு இந்திய அணி மோசமான சூழலை சந்தித்துள்ளது.

Lyon 1

- Advertisement -

இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : இந்த டார்கெட் சவாலான ஒன்றுதான் ஆனால் அடிக்க முடியாதது என்று கிடையாது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் இது போன்ற இக்கட்டான சூழ்நிலை கொண்ட போட்டிகளில் கூட மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளோம்.

இந்த போட்டியில் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் அது அமையாமல் போய்விட்டது. முதல் இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களை குவித்தனர். 469 ரன்கள் அடிக்கும் பிட்ச் இது கிடையாது. முதல் இன்னிங்சில் எங்களுடைய பந்துவீச்சு மோசமாக இல்லை என்றாலும் எளிதாக ரன்களை விட்டுக்கொடுக்கும் அளவில் இருந்தது.

Virat Kohli

டிராவிஸ் ஹெட்-க்கு எதிராக நாங்கள் மாற்று திட்டத்தை யோசித்து இருக்க வேண்டும். அதேபோன்று போட்டியின் நான்காம் நாள் மற்றும் ஐந்தாம் நாளில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை விளையாடி இருக்க வேண்டும். இரண்டாவது இன்னிங்சிலும் இந்த மைதானம் பேட்டிங்கிற்கு நன்றாகவே உதவியது. 300க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்காக இருந்தால் நிச்சயம் வெற்றியை நோக்கி நகர்ந்து இருக்க முடியும். நமது அணியில் உள்ள டாப் ஆர்டர் வீரர்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள்.

- Advertisement -

இதே வீரர்கள் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இந்த தோல்விக்கு காரணம் : இன்றைய நாள் நம்முடைய நாளாக இல்லை எனவே இந்த இக்கட்டான நிலையை சந்தித்துள்ளோம். ஐசிசி கோப்பையை கைப்பற்றும் நெருக்கத்தில் வந்தும் போட்டியின் நாள் நம்முடையதாக அமையாததால் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். ஆனால் கூடிய சீக்கிரம் வெற்றி நமக்கு கிட்டும்.

இதையும் படிங்க : WTC Final : இந்தியாவை வெச்சு செஞ்சு பழி தீர்த்த ஆஸ்திரேலியா – 2017 முதல் சந்தித்த அவமான தோல்விகளுக்கு மாஸ் பதிலடி

இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக தயாராக மூன்று வாரங்களுக்கு முன்னதாக நாங்கள் இங்கு வந்திருக்க வேண்டும். அதேபோன்று இந்த போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் கட்டாயம் விளையாடி இருக்க வேண்டும். அது எங்களுக்கு நிறைய உதவி புரிந்திருக்கும். ஆனால் அதை நாங்கள் தோல்விக்கான காரணமாக கூற விரும்பவில்லை என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement