நம்ம டீமுக்கு அவர் வந்துட்டாரு இல்ல. இனி பாருங்க ஆட்டத்தை. உலககோப்பையை குறி வைத்து – டிராவிட் அளித்த பேட்டி

Dravid
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இலங்கை நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. முன்னதாக பி.சி.சி.ஐ சார்பில் ஆலூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டது மட்டுமின்றி யோ யோ பரிசோதனையும் மேற்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்து இலங்கை சென்றடைந்த இந்திய அணி தற்போது அங்கும் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பிருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : காயத்திற்கு பிறகு மீண்டும் ஜஸ்ப்ரீத் பும்ரா அணிக்கு திரும்பி பந்துவீசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது, உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் அவர் நிறைய போட்டிகளில் விளையாட வில்லை என்றாலும் தற்போது விளையாடி வரும் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அயர்லாந்து தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் ஆசிய கோப்பை தொடரிலும் நிச்சயம் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார். இன்னும் உலகக் கோப்பை தொடரானது துவங்க சில மாதங்களே உள்ள வேளையில் தற்போது இந்திய அணியின் பந்துவீச்சு கூட்டணியும் பலம் பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை 2023 : இந்திய அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்த – சவுரவ் கங்குலி

முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருடன் பும்ராவும் இணைந்து இருப்பது இந்திய அணிக்கு புது தெம்பை அளித்துள்ளது. நிச்சயம் எதிர்வரும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement