இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்ததால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
ஏற்கனவே இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்திருக்கும் வேளையில் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இந்திய அணியால் சமன் செய்ய முடியும்.
ஒருவேளை அடுத்த போட்டி டிரா ஆனாலோ அல்லது தோல்வியை சந்தித்தாலோ இந்திய அணி இந்த தொடரினை இழக்க நேரிடும். இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக தற்போது இந்திய அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. எதிர்வரும் ஜனவரி 3-ஆம் தேதி கேப்டவுன் நகரில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக தற்போது இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் மோசமான பந்துவீச்சே தோல்விக்கு காரணமாக அமைந்தால் நிச்சயம் இரண்டாவது போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று முதலாவது போட்டியின் போது பேட்டிங்கில் சொதப்பிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பந்துவீச்சில் சொதப்பிய பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் வலைப்பயிற்சியில் இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனி கவனம் செலுத்தி பயிற்சி வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : வலைப்பயிற்சியில் காயமடைந்த ஷர்துல் தாகூர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா? – வெளியான அப்டேட்
அந்த வகையில் பேட்டிங்கில் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும், பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணாவிற்கும் தனித்தனியே பயிற்சி வகுப்புகளை எடுத்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் இனிவரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வகையில் அவர் தொடர்ச்சியாக அவர்களை கண்காணித்து பிரத்தியேக பயிற்சிகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது போட்டியில் பிரசித் கிருஷ்ணா வெளியேற்றப்பட்டாலும் நிச்சயம் ரோஹித் சர்மாவுடன் துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கப்போவது உறுதி.