கஷ்டம் தான்.. பாண்டியா இல்லனா என்ன அஸ்வின் இருக்காரு.. ப்ளேயிங் லெவன் பற்றி டிராவிட் பேட்டி

Rahul Dravid
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய 5வது போட்டியில் அக்டோபர் 22ஆம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதுவரை களமிறங்கிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் கடந்த 20 வருடங்களாக ஐசிசி தொடர்களில் நியூசிலாந்திடம் சந்தித்து வரும் தோல்விகளை இம்முறை நிறுத்தும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.

ஆனால் அதற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் துறையில் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தால் விளையாட மாட்டார் என்பது இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுக்கிறது. எனவே நிலைமையை சமாளிப்பதற்காக தாக்கூர் கழற்றி விடப்பட்டு சூரியகுமார் யாதவ், ஷமி ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டிராவிட் பதில்:
இந்நிலையில் அணியில் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய பாண்டியா இல்லாதது பின்னடைவு என்றாலும் அதை சமாளிப்பதற்காக அஸ்வின், ஷமி போன்ற தரமான வீரர்கள் தயாராக இருப்பதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டிக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “நிச்சயமான பாண்டியா எங்களுடைய முக்கிய வீரர். எனவே நாம் அதை சுற்றி வேலை செய்து எப்படி சிறந்த கலவையை கொண்டு வரலாம் என்பதை பார்க்க வேண்டும்”

“இருப்பினும் நாங்கள் கால சூழ்நிலைகள் மற்றும் பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து அதற்கேற்றார் போல் வேலை செய்ய வேண்டும். ஆனாலும் முதல் 4 போட்டிகளில் இருந்த சமநிலை எங்களுடைய அணில் இருக்கப் போவதில்லை. அதே சமயம் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட விரும்பினால் பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஷமி எங்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்துவார். அதே போலவே சில வாய்ப்புகளில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அஸ்வினும் அந்த தரத்தை கொண்டுள்ளார்”

- Advertisement -

“அதனால் பாண்டியா வரும் வரை எங்களிடம் 2 முதல் 3 கலவை களமிறங்குவதற்கு தயாராக இருக்கிறது. அதாவது நாங்கள் 3 ஸ்பின்னர்கள் அல்லது 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம். அது போன்ற கலவையில் ஜடேஜாவை பேட்டிங் வரிசையில் சற்று மேலே களமிறக்கி அஸ்வினையும் நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம். இது போல வித்தியாசமான கலவைகள் இருப்பதால் அதை நான் அதிகமாக சிந்திக்க விரும்பவில்லை”

இதையும் படிங்க: நியாயமா இந்த விருது அவருக்கு தான் போயிருக்கணும். சதம் அடித்தும் பெரிய மனசை காட்டிய – ஹென்றிச் கிளாசன்

“ஏனெனில் இப்போட்டியில் எங்களுடைய 11 பேர் அணியில் நாங்கள் குழப்பம் என்று தெளிவாக இருக்கிறோம்” என்று கூறினார். அதாவது தரம்சலா மைதானத்தை பார்த்த பின்பு எம்மாதிரியான கலவையை கொண்ட வீரர்களை களமிறக்கலாம் என்று முடிவெடுக்க உள்ளதாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார். இருப்பினும் ஏற்கனவே ஜடேஜா, குல்தீப் இருப்பதால் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement