எல்லாரும் சொல்ற மாதிரி நம்ம இந்திய அணிக்கு அந்த ப்ளஸ் கிடையாது – 2023 உலக கோப்பை பற்றி பயிற்சியாளரே கவலை பேட்டி

Rahul Dravid 2
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் தொடங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில் எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் கில்லியாக செயல்பட்டு வரும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சொல்லப்போனால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய எக்ஸ்ட்ரா அழுத்தத்தில் இந்தியா களமிறங்க உள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பது இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலவீனமாக காட்சிப்படுத்துகிறது. அதை விட இந்த தொடரில் இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து செல்கிறார்கள்.

- Advertisement -

டிராவிட் கவலை:
ஆனால் ஐபிஎல் தொடரில் கடந்த பல வருடங்களாக நிறைய வெளிநாட்டு வீரர்கள் விளையாடி இந்திய வீரர்களின் பலம், பலவீனங்கள் மட்டுமின்றி இந்தியாவின் கால சூழ்நிலைகளையும் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். அதை வைத்து ஏற்கனவே நிறைய சர்வதேச தொடர்களில் இந்தியாவை வெளிநாட்டு வீரர்கள் அடித்து நொறுக்கி வெற்றியை அசால்டாக பறித்து சென்றதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் அனைவரும் நினைப்பது போல் இந்தியாவுக்கு இத்தொடரில் சொந்த மண் சாதகம் இருக்கப் போவதில்லை என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடியதால் இந்தியாவின் கால சூழ்நிலைகள் அனைத்து அணிக்கும் வெளிப்படையாக தெரிவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இத்தொடரில் நிறைய நல்ல அணிகளும் இருக்கின்றன. மேலும் இந்திய துணை கண்டத்தின் கால சூழ்நிலைகள் சாதகம் என்பது கடந்த 10 – 15 வருடங்களில் மிகவும் குறைந்து போயுள்ளது. ஏனெனில் ஐபிஎல் போன்ற தொடர்களில் நிறைய வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர்”

- Advertisement -

“அதில் 2 மாதங்கள் இந்தியாவுக்கு வந்து விளையாடும் அவர்கள் இங்குள்ள கால சூழ்நிலைகளை நன்றாக தெரிந்து செல்கின்றனர். எனவே நிச்சயமாக இது இந்தியாவுக்கு மிகவும் கடினமான தொடராக அமையும். இருப்பினும் அதில் நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறேன். மேலும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விளையாடுவது குறிப்பிட்டளவு அழுத்தத்தை கொடுக்கும். ஆனால் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் உலக கோப்பையில் அசத்துவதையையே நாங்களும் எதிர்பார்க்கிறோம்”

இதையும் படிங்க: PAK vs NEP : இவங்களுக்கு எல்லாம் எதுக்கு 50 ஓவர். நேபாளை ஊதி தள்ளி மாஸ் வெற்றி பெற்ற – பாகிஸ்தான் அசத்தல்

“எனவே சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடி வெற்றி காண்பது மிகவும் ஸ்பெஷலான தருணமாக அமையும். தற்போது காயமடைந்துள்ள வீரர்கள் குணமடைந்துள்ளதால் நாங்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். எனவே நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த இத்தொடர் இறுதியாக அறையின் கதவுகளுக்கு அருகே சாதிப்பதற்காக வந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement