PAK vs NEP : இவங்களுக்கு எல்லாம் எதுக்கு 50 ஓவர். நேபாளை ஊதி தள்ளி மாஸ் வெற்றி பெற்ற – பாகிஸ்தான் அசத்தல்

PAK-vs-NEP
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று பாகிஸ்தான் நாட்டில் உள்ள முல்தான் நகரில் துவங்கியது. இந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் எளிதாக பாகிஸ்தான அணி நேபாள் அணியை வீழ்த்தி முதல் போட்டியிலேயே தங்களது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.

அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 151 ரன்களையும், இப்திகார் அகமது ஆட்டமிழக்காமல் 109 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 343 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நேபாள் அணியானது ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் அணியின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.

இறுதியில் பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 23.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 104 ரகளை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்று முதல் போட்டியிலேயே தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : முகமது ரிஸ்வான் அப்டி ரன் அவுட்டாக காரணம் என்ன தெரியுமா? முக்கிய பாய்ண்ட்டை சுட்டிக்காட்டிய சைன்டிஸ்ட் அஸ்வின்

முதல் போட்டியிலேயே தங்களது முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி அசுர பலத்தை பாகிஸ்தான் அணி வெளிக்காட்டியுள்ளதால் எதிர்வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement