இந்த மேட்ச்ய நீங்க எப்படி நடத்தலாம்? தோல்விக்கு பின்னர் அம்பயர்களுடன் சண்டைக்கு சென்ற – கோச் ராகுல் டிராவிட்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது நேற்று டிசம்பர் 12-ஆம் தேதி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்திருந்த வேளையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்யவில்லை. பின்னர் 15 ஓவர்களில் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

- Advertisement -

அதனை துரத்தி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதும் களத்திற்கு வந்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மைதானத்திலேயே தனது அதிருப்தியை மிகவும் காட்டமாக வெளிப்படுத்தினார்.

அதிலும் குறிப்பாக களத்திலிருந்த அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் மைதானத்தின் கீழ் கையை வைத்து தேய்த்து தண்ணீர் இருப்பதை சுட்டிக்காட்டி மைதானம் இப்படி இருக்கையில் நீங்கள் இந்த போட்டியை நடத்தி இருக்கக் கூடாது என்பது போல கடுமையாக நடுவர்களிடம் பேச ஆரம்பித்தார்.

- Advertisement -

அதன் பிறகு மூன்றாவது அம்பயர் அவரை சமாதானம் செய்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர். டிராவிட் இப்படி சண்டை போட காரணம் யாதெனில் : இந்திய அணி பேட்டிங் செய்து முடித்ததும் மழை சற்று அதிகமாக பெய்து தென்னாப்பிரிக்க அணி களத்திற்கு வந்தபோது எல்லாம் மைதானத்தின் மேற்பரப்பு காய்ந்திருந்தாலும் அடிப்பரப்பில் தண்ணீர் அதிகமாக இருந்தது.

இதையும் படிங்க : 1164 பந்துகள்.. விராட் கோலியின் சாதனை சமன் செய்த சூரியகுமார்.. யாராலும் நெருங்க முடியாத உலக சாதனை

அதனால் இந்திய அணியின் வீரர்கள் பீல்டிங் செய்யும்போதெல்லாம் தண்ணீர் தெறித்தது. அதுமட்டுமின்றி வீரர்கள் தவறி விழுந்தால் காயம் ஏற்படக்கூடிய மோசமான சூழலில் மைதானம் இருந்தும் போட்டியை நடத்தியது ஏன்? என்று தான் டிராவிட்டிற்கு கோபம் வந்துள்ளது.

Advertisement