உன்ன விளையாட வச்சா நம்ம டீம் தோத்து தான் போகும் – டீம் மீட்டிங்கில் இளம்வீரரை வெளுத்த ராகுல் டிராவிட்

dravid
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய கடைசி 5 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்த வேளையில் தற்போது கவுண்டி போட்டியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

Rohit Shamra Shami Pujara County Match

- Advertisement -

இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை சேர்ந்த பல்வேறு வீரர்களின் ஆட்டம் மோசமாக அமைந்ததால் தற்போது அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சற்று கடுப்பாகி உள்ளார். மேலும் முதல் நாள் பயிற்சிக்கு பின்னர் இந்திய அணி வீரர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர் டீம் மீட்டிங்கில் தனது கருத்துக்களை காட்டமாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயரை அவர் கடுமையாக விளாசியிருந்ததாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்த பயிற்சி போட்டியின் போது வீசப்பட்ட லென்த் பால்கள் மற்றும் ஷாட் பால்கள் என எதையுமே அவர் சரியாக விளையாடவில்லை.

shreyas iyer

அதோடு இந்த பயிற்சி ஆட்டத்தில் 11 பந்துகளை சந்தித்த அவர் டக் அவுட் ஆனதால் அதிர்ச்சி அடைந்த டிராவிட் டீம் மீட்டிங்கின்போது பேசுகையில் : முதல் நாள் ஆட்டம் எனக்கு திருப்தியாகவே இல்லை. குறிப்பாக ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டம் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. ஷாட் பாலுக்கு எதிராக இப்படி ஒரு திணறும் வீரரை அணியில் சேர்த்தால் ஒரு பேட்ஸ்மேன்கள் குறைவாக இறங்குவதற்கு சமம். இப்படி ஒரு வீரர் விளையாடும் போது அணிக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்.

- Advertisement -

எனவே நீங்கள் இப்படி திணறினால் டெஸ்ட் அணியில் மட்டுமல்ல எந்த அணியிலும் இடம் பிடிக்க முடியாது. விரைவில் உங்களது பலவீனத்தை சரி செய்து கொள்ள வேண்டும் என ஷ்ரேயாஸ் ஐயருக்கு டிராவிட் அறிவுரை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மைதானங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்.

இதையும் படிங்க : கே.எல் ராகுலும் வேணாம். ரிஷப் பண்ட்டும் வேணாம். இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் – பி.சி.சி.ஐ தகவல்

ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிலும் குறிப்பாக ஷாட் பால் வீசும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை ஆட்டமிழந்து வெளியேறியுள்ளது வெளிப்படையாகவே அவருக்கு இருக்கும் வீக்னஸை வெளிக்காட்டியது. இப்படி ஷ்ரேயாஸ் ஐயரின் வீக்னஸ் இதுதான் என்று புரிந்து கொண்டு பவுலர்களும் அவருக்கு எதிராக தொடர்ந்து ஷாட் பால் வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement