கே.எல் ராகுலும் வேணாம். ரிஷப் பண்ட்டும் வேணாம். இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்தான் – பி.சி.சி.ஐ தகவல்

ind
- Advertisement -

டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இடையில் உள்ள வேளையில் இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. பல வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு ஒரு தரமான அணியை கொண்டு செல்ல வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் நினைப்பதால் தற்போது இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மற்றொரு இந்திய அணி அயர்லாந்து நாட்டிற்கு சென்றடைந்துள்ளது.

Avesh-Khan

- Advertisement -

எதிர்வரும் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் 2 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ள ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மேலும் சில வாய்ப்புகள் அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களுக்கு கிடைக்கும் என்பதனால் இந்த தொடர் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களுக்கு ஒரு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

அதோடு இங்கிலாந்தில் நடைபெற உள்ள டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களிலும் சில மாற்றங்கள் இந்த தொடருக்கு அடுத்து நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் கே.எல் ராகுல் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியுடன் பயணிக்கவில்லை என்பதனால் அடுத்த துணைக்கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து தற்போது பிசிசிஐ ஒரு மீட்டிங் நடத்தி உள்ளது.

Pandya

அதில் பல்வேறு நிர்வாகிகளும் தங்களது கருத்துகளை வெளிப்படையாக அறிவித்து இருக்கின்றனர். அந்தவகையில் பிசிசிஐ மீட்டிங்கின் போது பல்வேறு நிர்வாகிகளும் கே.எல் ராகுலுக்கு தொடர்ச்சியாக காயம் ஏற்படுவதாலும், ரிஷப் பண்ட்டின் கேப்டன்சி திருப்தியாக இல்லை என்பதாலும் அவர்கள் இருவரையும் துணை கேப்டனாகவோ அல்லது எதிர்கால கேப்டனாகவோ நியமித்து பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.

- Advertisement -

அதோடு ஒரு நீண்ட கேப்டனை நாம் தேர்வு செய்ய வேண்டிய நோக்கில் ஹார்டிக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்கலாம் என்று ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதோடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ரோஹித்துக்கு அடுத்து இந்திய அணியின் முழுநேர கேப்டனாகவும் பாண்டியா நியமிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க : TNPL 2022 : அப்படி நடந்துகொண்டது தவறுதான் – அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்ட தமிழக வீரர், நடந்தது இதோ

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக செயல்பட்ட முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றிய பாண்டியா சிறப்பாக கேப்டன்சி செய்து அசத்தியதால் ஓட்டுமொத்த நிர்வாகிகளும் அவரை ஆதரித்துள்ளனர். இப்படி நிர்வாகிகள் பலரும் பாண்டியா குறித்து விவாதித்து உள்ளதால் அடுத்த ஆண்டு இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பாண்டியா மாற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement