TNPL 2022 : அப்படி நடந்துகொண்டது தவறுதான் – அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்ட தமிழக வீரர், நடந்தது இதோ

N Jagadeesan Apology
- Advertisement -

தரமான இளம் தமிழக வீரர்களை கண்டறியும் கிரிக்கெட் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 6-வது சீசன் ஜூன் 23இல் திருநெல்வேலியில் கோலாகலமாக துவங்கியது. இந்த தொடரில் நேற்று இரவு 7.15 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன. அப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய நெல்லை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து 184/4 ரன்கள் சேர்த்தது.

பிரசோத் பால் 7 (9), பாபா அபராஜித் 2 (3), பாபா இந்திரஜித் 3 (6) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிக பட்சமாக தொடக்க வீரர் சூரிய பிரகாஷ் 8 பவுண்டரியுடன் 62 (50) ரன்களும் மிடில் ஆர்டரில் கலக்கிய சஞ்சய் யாதவ் 5 பவுண்டரி 6 சிக்சருடன் 87* (47) ரன்களும் அஜிடேஷ் 16* (8) ரன்களும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 185 என்ற இலக்கை துரத்திய சேப்பாக்கம் 3.3 ஓவரில் 35/0 என்ற நல்ல நிலைமையுடன் சிறப்பான தொடக்கத்தை பெற்று பேட்டிங் செய்து கொண்டிருந்தது.

- Advertisement -

அநாகரிகமான ஜெகதீஷன்:
அப்போது 4-வது ஓவரை வீசிய பாபா அபராஜித் அதை எதிர்கொண்ட கௌசிக காந்திக்கு 4-வது பந்தை வீசிய போது எதிர்ப்புறம் இருந்த பேட்ஸ்மேன் நாராயன் ஜெகதீசன் கிரீஸ் எனப்படும் வெள்ளைக்கோட்டை ஒரு சில இன்ச்கள் கடந்ததை கவனித்தால் உடனடியாக மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். எம்சிசியே தாமாக முன்வந்து அந்த வகையான அவுட்டை அதிகாரப்பூர்வமாக ரன் அவுட் என்று அடிப்படை விதிமுறையில் சமீபத்தில் மாற்றம் செய்திருந்த காரணத்தால் அம்பயரும் அவுட் கொடுத்தார். ஆனால் அதற்காக ஆத்திரமடைந்த ஜெகதீசன் பாபா அபாரஜித்க்கு தனது நடுவிரலை 3 முறை காட்டிக்கொண்டே கோபத்துடன் பெவிலியன் திரும்பியதை நேரலையில் பார்த்த அத்தனை பேருக்கும் முகம் சுளிக்கும் வகையில் அமைந்தது.

அதை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ராதாகிருஷ்ணன் 1 (4) சசிதேவ் 15 (16) ராஜகோபால் சதீஷ் 5 (6) என முக்கிய பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் அவுட்டானலும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த கௌசிக் காந்தி 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (43) ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் சோனு யாதவ் அதிரடியாக 3 சிக்சருடன் 34 (23) ரன்களும் ஹரிஷ் குமார் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 26* (12) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் சேப்பாக் அணியும் மிகச்சரியாக 184/7 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

பகிரங்க மன்னிப்பு:
அதனால் டையில் முடிந்த இப்போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் 9/1 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை துரத்திய நெல்லை சஞ்சய் யாதவ் 7 ரன்கள், அஜிடேஷ் 1 ரன், 2 ஒயிட் உதவியுடன் 10 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் திரில் வெற்றியை பெற்றது. இப்போட்டியில் 87* ரன்கள், 2 விக்கெட், சூப்பர் ஓவரில் 7* ரன்கள் எடுத்த சஞ்சய் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக இப்போட்டியில் பாபா அபரஜித் மன்கட் செய்தது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஆனாலும் பாபா அபராஜித் விதிமுறைக்கு உட்பட்டே நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் ஆதரவளித்த ரசிகர்கள் அதற்காக அவருக்கு ஜெகதீசன் நடுவிரலை காட்டி அநாகரிகமாக நடந்து கொண்டது தான் மிகப்பெரிய தவறுவென்று வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

- Advertisement -

இதற்குமுன் ஜோஸ் பட்லரை அஸ்வின் அவுட் செய்தது உட்பட சர்வதேச கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரிலும் கூட இது போன்ற தருணங்களில் மன்கட் முறையில் அவுட்டானபோது ஜெகதீசனை போல் எந்த பேட்ஸ்மேனும் இவ்வளவு மோசமாக அநாகரிகமாக நடந்து கொல்லாமல் ஜென்டில்மேனாகவே நடந்து கொண்டனர். இந்நிலையில் அந்த பரபரப்பான தருணத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியில் பார்த்த அந்த போட்டியில் தாம் அவ்வாறு நடந்து கொண்டது தவறு தான் என்று ஜெகதீசன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது பற்றி தனது டுவிட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “நேற்றைய போட்டியில் எனது மன்னிக்க முடியாத நடத்தைக்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் கிரிக்கெட்டுக்காகவே வாழ்கிறேன் – மேலும் விளையாட்டோடு சேர்ந்து வரும் விளையாட்டுத்திறனை நான் மிகவும் மதிக்கிறேன். அதனால்தான் நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதை ஜீரணிப்பது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது”

இதையும் படிங்க : நீங்க சச்சினாவே இருந்தாலும் தப்பு தப்பு தான். ரோஹித்தின் தவறை சுட்டிக்காட்டி எச்சரித்த – கபில் தேவ்

“எந்த விளையாட்டிலும் ஆர்வம் எப்போதும் முக்கியமானது – ஆனால் அதைக் கட்டுப்படுத்துவது மற்றும் அதைச் சரியான வழியில் செலுத்துவது மிகவும் முக்கியமானது. என் கோபம் என்னை தாண்டி வெளியே வருவதை கட்டுபடுத்த தவறிவிட்டேன். அதை செய்ததற்கு சாக்குகள் சொல்லவில்லை, இனிமேல் நான் சிறப்பாகச் செய்வேன், சிறப்பாக இருப்பேன். வருத்தத்துடன் ஜெகதீசன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement