நீங்க சச்சினாவே இருந்தாலும் தப்பு தப்பு தான். ரோஹித்தின் தவறை சுட்டிக்காட்டி எச்சரித்த – கபில் தேவ்

Kapil-Dev
- Advertisement -

வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தற்போது நடைபெறும் அந்த தொடரின் கடைசி போட்டியிலும் வென்று 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க இந்தியா தயாராகி வருகிறது.

indvseng

ஆனால இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து வலுவான அணியாக மாறியுள்ளதால் இப்போட்டியில் வெற்றி பெறுவது இந்தியாவிற்கு கடும் சவாலாக அமையப் போகிறது. இருப்பினும் சவாலை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் அங்கு தீவிர வலை பயிற்சி எடுத்ததுடன் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட பயிற்சி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

தடுமாறும் ரோஹித்:
இந்த போட்டி ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது. ஏனெனில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இதுநாள் வரை இந்திய மண்ணில் மட்டுமே இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற கத்துக்குட்டிகளை எதிர்கொண்டு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். எனவே முதல் முறையாக இப்போட்டியின் வாயிலாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை வழிநடத்தும் அவர் ஏற்கனவே விராட் கோலி பெற்றுக்கொடுத்த முக்கால்வாசி வெற்றியை வெற்றிகரமாக பினிஷிங் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Rohit Sharma vs KKR

அத்துடன் ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் சுமாரான பார்மில் தான் உள்ளார். ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக அரை சதத்தை அடிக்க முடியாமல் திண்டாடிய அவர் 14 போட்டிகளில் வெறும் 248 ரன்களை 19.14 என்ற மோசமான சராசரியில் எடுத்தார். அவரின் சுமாரான பேட்டிங் வெற்றிகரமான ஐபிஎல் அணியான மும்பைக்கு வரலாற்றிலேயே முதல் முறையாக 10 தோல்விகளையும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தையும் பரிசளித்தது. அதனால் 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்த போதிலும் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

- Advertisement -

கபில் தேவ் கருத்து:
அந்த நிலைமையில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வெடுத்த அவர் புத்துணர்ச்சியுடன் இங்கிலாந்து தொடரில் களமிறங்க உள்ளார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் என யாராக இருந்தாலும் 14 போட்டிகளில் ரன்கள் அடிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள் என்று தெரிவித்துள்ள ஜாம்பவான் கபில் தேவ் சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் ரோகித் சர்மா ஓய்வெடுக்காமல் விளையாடியிருக்க வேண்டும் என்று கூறினார். இது பற்றிய சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Rohith-2

“இப்போதெல்லாம் யார் ஓய்வெடுக்கிறார்கள் அல்லது ஓய்வெடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது கடினமாக உள்ளது. அதைத் தேர்வு குழுவினர் மட்டுமே அறிகிறார்கள். அவர் (ரோஹித்) ஒரு சூப்பரான வீரர் என்பதில் கேள்வியில்லை. ஆனால் நீங்கள் 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லையெனில் கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் என யாராக இருந்தாலும் கேள்விகள் எழத்தான் செய்யும். இப்போது என்ன நடக்கிறது என்பதற்கு ரோகித்தால் பதிலளிக்க முடியும்”

- Advertisement -

“நீங்கள் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடி விட்டீர்களா அல்லது மகிழ்ச்சியுடன் விளையாடுவதை நிறுத்தி விட்டீர்களா? ரோகித் மற்றும் விராட் போன்ற வீரர்கள் விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். அவர்கள் தங்களது ஆட்டத்தை பற்றி எப்படி உணர்கிறார்கள் என்பது முக்கியம். ஃபார்முக்கு திரும்ப நீங்கள் ரன்கள் அடிக்க வேண்டும்”

Kapildev

“வெறும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு நீண்ட தூரம் செல்ல முடியாது. 14 போட்டிகளுக்கும் பின்பும் உங்களுக்கு இன்னும் எவ்வளவு வாய்ப்புகள் தேவைப்படுகிறது? அவர்கள் (ரோஹித் மற்றும் விராட்) எதற்காக ஓய்வளிக்கப்பட்டார்கள் என்று புரியவில்லை. ஒருவேளை அவர்கள் நீக்கப்பட்டால் அதன்பின் அவர்களுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா? இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்கள் எவ்வாறு விளையாட போகிறார்கள் என்பதை பார்ப்பது கடினமாக உள்ளது”

- Advertisement -

“ஒருவேளை எனது இந்த கருத்தை அவர்கள் தவறு என்று நிரூபித்தால் நான் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் ரன்கள் அடிக்கவில்லையெனில் ஏதோ ஒரு இடத்தில் தவறு உள்ளது. அது அதிகப்படியான கிரிக்கெட் அல்லது குறைந்ததாக இருக்கலாம். நாங்கள் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மட்டுமே பார்ப்போம். ஒருவேளை உங்களது செயல்பாடுகள் சரிந்தால் அது பற்றிய விமர்சனங்களை நிறுத்துவது சாத்தியமற்றது. அதற்காக உங்களது செயல்பாடு மற்றும் பேட் மட்டுமே பேச வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஒரு அடி, ஒரு மன்னிப்பு. பயிற்சி போட்டியில் இந்திய வீரர்களுக்கிடையே நடந்த 2 சம்பவங்கள் – விவரம் இதோ

அதாவது ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற பெரிய பெயரை எடுத்த பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டால் தான் இந்திய அணியில் நீடித்து விளையாட தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ள கபில் தேவ் ஒருவேளை தன்னுடைய இந்த கருத்தை சதங்களும் பெரிய ரன்களும் அடித்து தவறு என அவர்கள் நிரூபித்தால் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியுள்ளார்.

Advertisement